பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/399

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

374 நினைவுக் குமிழிகள்-2

அநுபவித்தார்கள் என்றே சொல்ல வேண்டும்; பத்திரிகைக்கு அனுப்பினால் பலருக்குப் பயனாக இருக்கும் என்றும் கூறினார்கள். .

அக்காலத்தில் பெரியசாமி தூரனை ஆசிரியராகக் கொண்டு கோவையிலிருந்து வெளிவந்த கால சக்கரம்’ என்ற திங்கள் இதழுக்கு அனுப்பி வைத்தேன். பத்துக் கட்டுரைகள் இந்த இதழில் வெளிவந்தன. அப்போது உயர்நிலை பள்ளியில் மாணவியாக இருந்த திருமதி. சவுந்திரா கைலாசம் அம்மையார் இவற்றைப் படித்து அநுபவித்ததை அண்மையில் ஒருசமயம் அவர்களுடன் உரையாடிக் கொண்டிருந்த போது என்னிடம் தெரிவித்தார்கள். வெளி வந்த 10 கட்டுரைகளையும் வெளிவர இருந்த 15 கட்டுரை களையும் தொகுத்து கவிஞன் உள்ளம் என்ற பெயரில் ஒரு நூலாக வெளியிட்டேன் (சனவரி, 1949) இதுதான் என் முதல் வெளியீடு; கன்னி வெளியீடு .

இந்த நூலுக்கு ஓர் அணிந்துரை தக்கார் ஒருவரிடமிருந்து பெற வேண்டும் என்று கருதினேன். அப்போது கல்வியமைச்ச ராக இருந்தவர் தி. சு. அவினாசிலிங்கம் செட்டியாரவர்கள். அன்று (ஏன் இன்றுகூட-1989) என் மதிப்புக்கும் மரியாதைக்குமாக இருப்பவர் இப்பெருமகன். அணிந்துரை வாங்குவதற்கென்றே துறையூரிலிருந்து சென்னை வந்தேன். அப்போது அவைச்சர் சாந்தோம் பகுதியில் வசித்து வந்தார். நூலின் ஒரு படியை முன்னரே அவருக்கு அஞ்சல் வழிஅனுப்பி வைத்திருந்தேன். நேராக அவர் மனமுவந்து சிறியேனை இன்முகத்துடன் வரவேற்றார். பின்னர், "மிஸ்டர் ரெட்டியார். தங்கள் நூலுக்கு அணிந்துரை தர விரும்பி னேன். நூலைப் படித்துப் பார்த்ததில் அது காதற் கட்டுரைகளைக் கொண்டிருப்பதைக் கண்டேன். என் நிலைக்கும் நான் மேற்கொண்டுள்ள இராமகிருஷ்ண