பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/400

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிஞன் உள்ளம் 375

வித்தியாலயப் பணிக்கும் இவை ஒவ்வாதவை. ஆகவே இந்த நூலுக்கு அணிந்துரை தர முடியாமைக்கு வருந்து கின்றேன். வேறொரு நூலுக்கு அவசியம் தருவேன்’ என்று கூறி நூலை என்னிடமே திருப்பித் தந்து விட்டார்." நானும் அவரிடம் நகைச்சுவையாக, 'ஐயா, அநுமன் குறித்து ஒரு நூல் எழுதத் திட்டமிட்டுள்ளேன். அதற்குப் பெறுவேன்! என்று கூறி விடை பெற்றுத் திரும்பினேன்.

அக்காலத்தில் தமிழில் கலைக்களஞ்சியப் பணிதொடங்கப் பெற்றிருந்தது இப் பெருமகனாரின் முயற்சியால், "தமிழ் வவர்ச்சிக் கழகம்’ என்ற நிறுவனம் இப்பொறுப்பை மேற் கொண்டிருந்தது.திரு.பெரியசாமித்துரன் இதன் முதன்மைப் பொறுப்பாசிரியர் பொறுப்பைஏற்றிருந்தார். இவரிடமாவது அணிந்துரை பெறலாம் என்று கருதி அவர் குடியிருந்த புரசைவாக்கத்திலுள்ள இல்லத்திற்கு இரவு 7-30க்கு வந்து சேர்ந்தேன், 'காலசக்கரத்தின் ஆசிரியரல்லவா? காலச் சக்கரத்தில் வெளிவந்த 10 கட்டுரைகளும் இந்நூலில் அடங்கி யுள்ளன என்றும் கூறி அணிந்துரை வழங்குமாறு வேண்டி னேன். நூலைப் புரட்டிப் பார்த்தார்; என்ன நினைத்தாரோ அணிந்துரை தர மறுத்துவிட்டார். முதலில் அவர் என்னை வரவேற்ற முறை, பேசிய தோரணை இவையே எனக்குப் பிடிக்கவில்லை. தம்மைத் தம் நிலைக்கு மேல் உயர்ந்தவர் என்று கருதிக் கொண்டிருந்தமையைக் குறிப்பால் உணர்ந்து கொண்டேன். நன்றி சொல்லி விடை பெற்றுத் திரும்பினேன்.

அடுத்து, என்ன செய்வதென்று தெரியவில்லை. நான் தங்கியிருந்த பன்மொழிப் புலவர் வே. வேங்கடராஜூலு ரெட்டியார் இல்லத்திற்குத் திரும்பினேன். (13. வடக்கூர் செல்வ விநாயகர் தெரு, மயிலாப்பூர்). மறுநாள் காலைச் ஒற்றுண்டியை முடித்துக் கொண்டு. குமரிமலர் அலுவலகம்