பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/401

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

376 நினைவுக் குமிழிகள்-2

(100, மாவ்பிரேஸ் சாலை, ஆழ்வார் பேட்டை) வந்தேன் உலசம் சுற்றும் தமிழன் ஏ. கே. செட்டியாரிடம் அணிந்துரை பெறும் நோக்கத்துடன். அவர் மிகவும் மகிழ்ந்து, “நான் தருவதில் மகிழ்கிறேன். ஆனால் என்னைவிடச் சிறந்த எழுத்தாளரும் இலக்கியச் சுவைஞருமான பி. பூரீ ஆச்சாரி யாரிடம் பெறுவது நல்லது' என்று கூறி அருகிலுள்ள சீனிவாச அய்யங்கார் சாலையில் ஒர்இல்லத்தில் தங்கியிருந்த பி, ரீ, யிடம் என்னை இட்டுச் சென்று, அறிமுகம் செய்து வைத்து, நான் வந்த காரியத்தை எடுத்துரைத்தார். அன்று தான் முதன் முதலாக பி. பூர். அவர்களைக் கண்டேன். அதற்கு முன்னர் அவர் எழுதியுள்வ பல நூல்களைப் படித் திருந்தேன்; ஆனந்தவிகடனில் வெளிவந்த கம்பசித்திரம்’ தொடர் கட்டுரைகளைப் படித்து அநுபவித்தேன். அவரும் ஒப்புக் கொண்டு நூலை வாங்கிக் கொண்டார். பதினைந்து நாளில் அனுப்புவதாகச் சொன்னார்: அனுப்பியும்வைத்தார். இந்தப் பெருமகனின் ஆசியைக் கிடைத்தற்கரிய பெரும் பேறாகக் கருதுகின்ே

நூலை ஒரு நல்ல பாத்திரத்திற்கு அன்புப்படையலாக்க நினைத்தேன். என் மனத்தில் முதலிடம் பெற்றிருந்தவர் பன்மொழிப் புலவர் வே.வே. ரெட்டியார். அவருக்கு,

திருந்திய வுளத்தை மாலடிக் காக்கிச்

சேவையைத் தமிழ்மொழிக் காக்கிப் பொருந்திய லமுதை யார்வலர்க் காக்கிப் புலமையை அடக்கத்திற் காக்கிப் மருந்தெனும் கருனை எம்மனோர்க் காக்கிப்

மனத்துற வெய்திய பெரியோன் அருந்தமிழ்க் குரிசில் வேங்கட ராசன்

அடிமலர்க் குரிய திந்துாலே.