பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/402

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காரைக்குடி-கம்பன் திருநாள் 377

என்ற பாடலால் அன்புப் படையலாக்கி மகிழ்ந்தேன். ஒளிப் படம் (Photo) தர மறுத்ததால் நூலை அவர் திருவுருவம் அணி செய்யாத நிலை. இதுவே குறை. இவருடைய ஆசி யால்தான் என் பிற்கால வாழ்க்கை உயர்ந்தது என்று இன்றும் அதிராத நம்பிக்கை கொண்டுள்ளேன். தமிழின் பால் என்னை ஆற்றுப்படுத்தியவரும் இப்பெருமானாரே.

குமிழி-106 42. காரைக்குடி - கம்பன் திருநாள்

பிேன் துறையூரிலிருந்தபோது திரு. கே.எஸ். முத்து வேல் பிள்ளை அடிக்கடி டி.கே.சி. பற்றியும் காரைக்குடி கம்பன் திருநாள் பற்றியும் கூறி ஓராண்டு காரைக்குடிக் கம்பன் திருநாளுக்குப் போய்வருமாறு அடிக்கடிச் சொல்லி உற்சாக மூட்டிவருவார். 1949-ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் அந்தத் திருநாள் நடைபெற்றது. அந்த விழாவுக்கு டி.கே.சி. சென்னையிலிருந்து இந்தோ-சிலோன் விரைவு இருப்பூர்தி யில் வந்து கொண்டிருந்தார். திரு. முத்துவேல் பிள்ளை யவர்கள் என்னை வற்புறுத்தி அந்த வண்டியில் வந்து கொண்டிருந்த ரசிகமணிக்கு என்னைத் திருச்சியில் அறிமுகப் படுத்தி அவருடன் இணைத்துவிட்டார். இந்த நாள்தான் பின்னர் என் வாழ்வின் பொற்காலத்திற்குக் கால்கோள் விழாவாக அமைந்தது.

டி.கே.சி.யை நேரில் பார்த்துப் பழகாவிடினும் அவரது நூல்கள் பலவற்றை முன்னரே படித்து அறிந்திருந்தேன்." இதனால் ரசிகமணி' என்ற பட்டம் பொருத்தமானது என் பதையும் தெரிந்திருந்தேன். திரு. முத்துவேல் பிள்ளை எதையும், யாரையும் சற்று மிகைப்படுத்திக் கூறும் பழக்க முடையவர் என்பதை அவருடன் பழகும் அனைவரும் அறிவர், வஞ்சகமின்றிப் பழகும் வெள்ளை மனிதர்.