பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/407

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

382 நினைவுக் குமிழிகள்-2

ஆனாத உயிர்விடவென்று அமைவானும்

ஒருதம்பி; அயலே நானாது

யானாம்.இவ் வரசாள்வென்? எனனே இவ்

வரசாட்சி? இனிதே அம்மா."

இராமன் வராமையால் தான் இறக்கத் துணிந்துவிட்டதாக வும், அரசப் பொறுப்பை ஏற்றுக் கொள்ளும்படியாகவும் பரதன் சத்துருக்கனனிடம் கூற அதற்கு அவன் கூறும் மறு மொழியாக அமைந்தது இப்பாடல், சூழ்நிலையை விளக்கி நம்மை அயோத்திக்குக் கொண்டு சென்றுவிடுகின்றார். 'கொழுந்துவிட்டு நிமிர்கின்ற கோபத்தான்' கூறுவதை உணர்ச்சி பொங்க விளக்குகின்றார் டி.கே.சி. இவ்வாறு விளக்கும்போது தான் சத்துருக்கனனாகவே ஆய்விடு கின்றார். நம்மையும் அவனாகவே ஆக்கிவிடுகின்றார் தம் முடைய அற்புத ரசவாத வித்தையால். இதற்கு முன் இவரது நூல்களைப் படித்திருந்தாலும் இவர் பேச்சைக் கேட்ட பிறகு மீண்டும் இவர் நூல்களைப் படிக்கும்போது பேசுவதும் எழுதுவதும் ஒன்றாகவே இருப்பதை அறிகின்றேன்.

நான்கு நாட்கள் கணேசன் வீட்டில் அவருடனும் விருந் தினர்களாக வந்துள்ள கம்பன் அடியார்களுடனும் நன்கு கலந்து பழகும் வாய்ப்புகள் கிடைத்தன. நான்காம் நாள் ஒரு சிற்றுந்தில் (Van) எங்களுக்கு வேண்டிய உணவு (வர்க்கன்ன வகைகள்), குடிப்பதற்கு வேண்டிய நீர் இவற்றை ஏற்றிக்கொண்டு சிலர் வர, மூன்று நான்கு மகிழ்வுந்துகளில் சில விருந்தினர்கள் வர, நாட்டரசன் கோட்டைக்கு எங்கள் பயணம் தொடங்கியது சுமார் காலை 9 மணிக்கு. 10 மணிக்குக் கல்லல் என்ற ஊரில் செட்டியார் ஒருவர் (பெயர் நினைவு இல்லை) சிறு விருந்து அளித்தார்.

2. கம்ப. யுத்த (!!), மீட்சி-223,