பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/408

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காரைக்குடி-கம்பன் திருநாள் 333

சில பிஸ்கட்டுகள்; காஃ பி. 100 இளநீர் வரையில் குவித்து வைத்திருந்தார். ஒருவர் அவற்றை வெட்டி வெட்டி நீரை ஒரு பெரிய போவணியில் விட்டுக்கொண்டே இருந்தார். சில இளைஞர்கள் நீரை வினியோகித்துக் கொண்டே இருந்தார் கள். விரும்பினவர்கள் இளந்தேங்காய்ப் பருப்பையும் உண்டு மகிழ்ந்தனர்.

11; மணிக்கு மீண்டும் பயணம் தொடங்கியது. பிறிதோர் இடத்தில், ஒரு மடத்தில், வண்டிகளை நிறுத்திப் பகலுணவு தரப் பெற்றது. இந்த மடம் வேப்ப மரங்கள் சூழ்ந்த சோலை; குளிர்ச்சியாக இருந்தது. கூட்டமாக உண்பதும் வேடிக்கையாகப் பேசுவதும், அப்படிப் பேசும் போது இதுகாறும் மூன்று நாட்கள் நடைபெற்ற நிகழ்ச்சி களைப்பற்றிய திறனாய்வுமாகப் பேச்சு அமையும். இது பெருமகிழ்ச்சியை அளித்தது. புதியதோர் அநுபவத்தையும் தந்தது. குக்கிராமத்தில் அடைபட்டுச் சிறுவர்கள் கல்வி யிலும் பள்ளியின் வளர்ச்சியிலும் ஆழ்ந்து கிடந்த என் மனம் விரிந்து பரவக் காரணமாகவும் இருந்தது. இஃதெல்லாம் இறைவன் எனக்கு நல்கிய வாய்ப்புகள் என்று பக்தியுடன் கருதிப் போற்றுகின்றேன்.

மீண்டும் 2: மணிக்குப் பயணம் தொடங்கியது. 3; மணிக்கு நாட்டரசங்கோட்டைக் கம்பன் சமாதியை அடைந் தோம். சா. கணேசன் திருமுழுக்காடி உடல் உளத்தூய்மை யுடன் வழிபாட்டுக்குத் தயாரானார். 4 மணிக்கு எல் லோருக்கும் மாலைச் சிற்றுண்டி, காஃபி வழங்கப் பெற்றன. கம்பன் வாக்குகளிலிருந்தே பொருக்கி 108 அடிகளடங்கிய போற்றி அகவல் தயார் செய்யப் பெற்றிருந்தது. கம்பன் சமாதியின்மீது இலிங்கம் பிரதிட்டை செய்யப்பெற் றிருந்தது. இசைப் பயிற்சியுடைய ஒருவர் அகவலை அடி அடியாக நிறுத்திப் படிப்பார். ஒவ்வொரு அடி படிக்கப்