பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 நினைவுக் குமிழிகள்-2

மறுநாள் மரக்கடைக்குச் சென்று விலை விசாரித்துக் கொண்டு கூவியுடன் ஒர் உத்தேசச் செலவுக் குறிப்புடன் (Estimate) என்னைச் சந்தித்தார். எல்லாவற்றிற்கும் ரூ 92;- போதும் என்றார். நான் ரூ 100|. ஐயும் அவரிடம் தந்து ஒரு மாதத்தில் செய்து தருமாறு சொன்னேன். இவற்றைச் செய்வதற்குப் பள்ளியிலோ வீட்டிலோ இடம் இல்லாததால் சின்னதுரை பங்களாவிலேயே செய்துகொண்டு தருவதாகக் கூறிச் சென்றார். (மிக நல்லவர்; 45 ஆண்டு கட்குப் பின்னர் அவர் பெயரை நினைவுகூர முடியவில்லை). அன்றுமே சரி, இன்றுமே சரி எந்தத் தொழிலாளியும் சொன்னபடி நடந்து கொள்ள முடிவதில்லை. ஒரு மாதம் ஆயிற்று; இரண்டாவது மாதமும் கழிந்தது. சாமான்கள் வரவில்லை. இடையில் மழைக்காலம்வேறு; அக்காலத்தில் பெருமாள் பாளையத்திற்குச் சாலை வசதிகள் சரிவர இல்லாததால் மிதிவண்டியில் வரமுடிவதில்லை; இந்த வகை ஊர்தியைத் தவிர நடுத்தர வகுப்பினருக்கும் ஏழை மக்கட்கும் வேறு வகை வாகன வசதிகள் இல்லை. சனவரி யில் (1942) சாமான்கள் வந்து சேர்ந்தன. 'இன்னும் கொஞ்சம் வேலை உள்ளது; நைஸ் பட்டை சீலை போட்டுத் தேய்த்து ஃபிரெஞ்சு பாலிஷ் அடித்தால் சாமான்கள் கண்ணாடிபோல் மின்னும், உங்கள் பணம் ரூ 81. என்னிடம் உள்ளது. அது போதும் இவ்வேலைகளைச் செய்வதற்கு' என்று கூறிச் சென்றார். அதன் பிறகு அவரும் வரவில்லை; நானும் அவற்றை மறந்தேன். அந்த நிலையிலேயே இன்றும் அந்தச் சாமான்கள் என்னிடம் உள்ளன. 1980-இல் சென்னைக்கு வந்த பிறகு இன்னொரு முறை பாலீஷ் தீட்டினேன். இன்று ரூ. 2500/- க்குக்கூட அதைச் செய்து கொள்ள முடியாது என்பதை அறிகின்றேன். அவை இன்று செய்தவைபோல் மிக அழகாகவே உள்ளன.