பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/412

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எதிர்பாராத நிகழ்ச்சி 387

தையின் ஆயுள்பற்றி உறுதிசொல்ல முடியும் என்றார். படித்த படிப்புடன் அநு:வ மும் கலந்து வந்த வார்த்தை இது. இறையருளால் மகன் நிறைவாழ்வு பெற்றான்; உயர் கல்வியும் பெற்று நல்ல உயர்பதவியிலும் இருந்து வருகின்றான். இரண்டு பேத்திமார்கள்,

சொல்லு மழலையிலேயே -கண்ணம்மா!

துன்பங்கள் தீர்த்திடுவாய்: முல்லைச் சிரிப்பாலே -என்து மூர்க்கந் தவிர்த்திடுவாய்; இன்பக் கதைகளெல்லாம் - உன்னைப்போல்

ஏடுகள் சொல்வதுண்டோ? அன்பு தருவதிலே - உனைநேர்

ஆகுமோர் தெய்வமுண்டோ? -

என்று பாரதியார் சொல்லுகிறபடி எனக்கு மகிழ்வூட்டி வருகின்றனர். -

மொட்டை விண்ணப்பத்தின் தொல்லையால் மூன்று மாதம் சென்னைக்குப் போவதும் வருவதுமாக இருந்தேன். பன்மொழிப் புலவர் வே. வேங்கடராஜுலு ரெட்டியார் வீடு தான் தங்குமிடம், பயிலும் இடம். அடிக்கடி பல்கலைக் கழக நூலகமும் சென்று வருவேன். பல நூல்களைப் பயின்று குறிப்புகளும் எடுத்துக் கொண்டு வந்தேன். இந்த ஆண்டு மன அமைதியின்மையால் எம்.ஏ. தேர்வு எழுத வில்லை. மார்ச்சு 31இல் (1950) துறையூர் திரும்பினேன். தேர்வு சமயம் மாணவர்களைக் கவனிக்க முடியவில்லையே என அடிக்கடி வருந்தியதுண்டு. நான் இங்கனம் அலைந்து

2, பா.க. கண்ணன் பாட்டு - கண்ணம்மா என்

குழந்தை-8,9 - -