பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/413

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

388 நினைவுக் குமிழிகள்-2

வருவதைக் கண்டு மொட்டை விண்ணப்பத்திற்குக் காரண மாக இருந்தவர்களின் முகத்தில் இன்ப ஒளியையும் என் ஆன்ம நண்பர்களின் முகத்தில் துன்பக் களையையும் கண்டு மகிழ்ந்தேன்.

இடுக்கண் வருங்கால் நகுக; அதனை அடுத்துர்வது அஃதொப்ப தில்"

என்ற குறள் எனக்கு மன அமைதியைத் தந்து என்னைக் காத்தது.

கனவினும் இன்னாது மன்னோ வினைவேறு சொல்வேறு பட்டார் தொடர்பு"

என்ற குறளின் உண்மையை அநுபவ வாயிலாக உணர்ந் தேன். இன்னும், இன்றும்,

பகைநட்பாங் காலம் வருங்கால் முகநட்பு அகநட் பொரீஇ விடல்" என்ற குறள் என் வாழ்க்கையில் வழிகாட்டுகின்றது: மின் கைவிளக்கு போல் உதவுகின்றது.

பள்ளி மாணவர்கள் வகுப்பு மாற்றம், பள்ளி ஆண்டு வரவு - செலவுக் கணக்கு இவற்றையெல்லாம் பக்தியுடன் செய்து முடித்தேன். சில நாட்களாக என் வாழ்க்கையில் என்றுமில்லாத மன அமைதியும் மன மகிழ்ச்சியும் நிலவின. ஏதோ நற்காலம் வருகின்றது என்பதற்கு இவை உற்பாதங் களாகத் தோன்றின. ஒரு நாள் திடீரென்று ஒரு தந்தி வந்தது காரைக்குடி அழகப்பச் செட்டியார் பயிற்சிக் கல்லூரி

3. குறள்-62 (இடுக்கண் அழியாமை) 4. டிெ 819 (தீநட்பு) 5. டிெ 830 (கூடாநட்பு)