பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/415

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

390 . நினைவுக் குமிழிகள்-2 -

சொல்லாப் பிழையும் துதியாப்

பிழையும் தொழாப்பிழையும்

எல்லாப் பிழையும் பொறுத்தருள்

வாய்கச்சி ஏகம்பனே"

என்று ஏகாம்பர நாதனைத் துதித்துத் தாளாளரிடம் சென்று என்னைக் கழற்றிவிடுமாறும், ஒராண்டு விடுமுறையும் தொடர்புரிமையும் (Lien) தருமாறும் வேண்டினேன்; என் அன்றைய நிலையை எடுத்துக் கூறியும் இரண்டாண்டுகள் கழித்து திரும்ப வந்து விடுவேன் என்று கூறியும் மனம் இரங்கவில்லை; மறுத்துவிட்டார்.

நான் தொடங்கி வளர்த்த பள்ளியை முற்றிலும் துறந்து விட முடிவு செய்தேன். பட முடியாது இனித்துயரம் பட்டதெல்லாம் போதும் என்று நினைந்து இந்த முடிவிற்கு வந்தேன். எது வந்தாலும் அஃது எம்பெருமான் அருள் தானே என்ற நம்பிக்கையைச் சிறு வயது முதற்கொண்டே என் இயல்பாகச் செய்துவிட்டான் என்னைப் படைத்த இறைவன் அவன்மீது எல்லாப் பாரத்தையும் போட்டு நிலை மையை விளக்கித் தாளாளரிடம் பேசிய அனைத்தையும் கோவைப் படுத்தி அழகான ஆங்கிலத்தில் அலுவலகக் குறிப் பாக எழுத்தர்மூலம் அனுப்பி வைத்தேன்; உடனே முடிவு தெரிய வேண்டும் என்று சொல்வியும் அனுப்பினேன். எழுத்தர் சீநிவாச அய்யங்கார் இங்கிதம் தெரிந்தவர். நீதிமன்றத்தில் அமீனாவாகப் பணியாற்றியவரல்லவா? நளினமாகப் பேசி வெற்றியுடன் திரும்ப நினைத்தார். இவர் பருப்பும் வேகவில்லை. "ஒப்பந்தத்திலுள்ள நிபந்தனைகளின்படி Gætuarii’ (As per the terms of the Agreement) srdwa

7. பட்டினத்தார் பாடல்கள் . கச்சி ஏகம்பமாலை.9. -