பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/416

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எதிர்பாராத நிகழ்ச்சி 391

எழுதியனுப்பிவிட்டார். தாளாளர். நான் அவரைக் கெஞ்சிச் சலுகைபெற விரும்பவில்லை. இறுதி வரையில் பணி வாகப் போவதே முறை என்பதை ஆண்டவன் எனக்கு வழி காட்டிக் கொண்டே இருப்பான்.

இப்போது முற்பகல் 11 மணி. ரூ. 540/-க்கு இலட்சுமி விலாஸ் பாங்கிக்கு முத்துசாமிமூலம் (Attender) ஒரு காசோலை அனுப்பி ஒரு Pay Order வாங்கி வரும்படி செய்தேன். திரு. பிச்சுமணி அய்யரை ஒரு கடிதம் தயார் செய்து தட்டச்சு செய்யும்படிப் பணித்தேன். "நிபந்தனை களின்படி ரூ 540/-க்கு (மூன்று மாத சம்பளம்) Pay Orde' இணைத்துள்ளேன். தங்களிடம் விடுதலை பெறும் உத்தரவைக் கூட எதிர் பார்க்கவில்லை, பள்ளியில் என் காலத்தில் ஏதாவது குறைகள் இருப்பின் அவற்றை ஈடு செய்வேன்' என்று வாசகம் இருக்குமாறு கடிதம் தயார் செய்யப்பெற்றது. பிற்பகல் 4 மணிக்குள் எழுத்தர் சீநிவாச அய்யங்கார் மூலம் கடிதத்தையும் Pay Order ஐயும் அனுப்பிக் கடித நகல் பெற்றுக் கொண்டமைக்கு ஒப்பம் வாங்கி வருமாறு பணித்தேன். இத்துடன் என் ஒன்பதாண்டு பள்ளி வாழ்வு நிறைவு பெற்றது.

கல்லூரி காரைக்குடியில் சூலை ஐந்தாம் நாள் தொடங்கப் பெறுகின்றது என்று தெரிந்திருந்தமையால் பெட்டி படுக்கையுடன் சூலை 4 ஆம் நாள் காலையில் புறப்பட்டேன். இருப்பூர்தி வண்டி 12 மணிக்கு இருக்கும் என்பதாக நினைவு. மாலை 4 மணிக்குக் காரைக்குடிப் போய்ச் சேர்ந்தேன். காரைக்குடியில் எவரையும் அறியேன். இருப்பூர்தி நிலையத்திலிருந்து குதிரை வண்டி ஒன்றை நியமித்துக் கொண்டு நேராக திரு. சா. கணேசன் இல்லத் திற்குச் சென்றேன். அச்சமயம் அவர் இல்லத்தில் இருந்