பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தனிக் குடும்பம் வைத்த இல்வாழ்க்கை 1?

குடும்பம் வைத்த பிறகு ஒரிரு மாதங்களில் என் மைத்துனர் தம் நண்பர் A. இராமச்சந்திர ஆச்சாரியுடன் எங்களைப் பார்ப்பதற்குத் துறையூர் வந்தார். திருமணம் முடிந்து ஆறு ஆண்டுகள் கழித்து நாங்கள் குடும்பம் நடப்பதை இவர்கள் பார்க்கின்றனர். இரண்டு நாட்கள் தங்கியிருந்தனர். ஊரைச் சுற்றிப் பார்த்தனர்; பெருமாள் மலை சென்று வந்தனர். இந்தப் பயணத்தின்போது என் மைத்துனர் பணப்பையிலிருந்து என் மனைவி ரு 50/எடுத்துக் கொண்டாள்; தன் தமையனிடமும் இதைச் சொல்வி விட்டாள். அவர்கள் தம்முருக்குத் திரும்பிய பிறகு ஒரு நாள் நாங்கள் வெள்ளிக் கடைக்குச் சென்று ஒரு சொம்பு, ஒரு டம்ளர், ஒரு குத்துவிளக்கு இவற்றை வாங்கி வந்தோம். அன்று ஒரு ரூபாய் வெள்ளி எடை 0 = 12 = 0 அளவாக (75 பைசா) இருந்தது. அந்தச் சாமான்கள் இன்றும் புழக்கத்தில் இருந்து வருகின்றன. இவற்றின் மதிப்பு இப்போது ரூ 2000/- இருக்கும். விளக்குமட்டிலும் இல்லுறை தெய்வத்தின் சந்நிதியில் எரிந்து கொண்டுள்ளது ஏனைய இரண்டும் பீரோவினுள் அடக்கமாயின. நாங்கள் குடும்பம் நடத்தியபோது இருந்த ஸ்டில் சாமான்கள் பித்தளை அண்டாக்கள், போவணிகள் யாவும் பரண்மீது தூங்குகின்றன. ஏதாவது சிறப்பான நிகழ்ச்சிகள் நடை பெறும் போது அவை தலைகாட்டும். -

நான் துறையூரில் பணியாற்றியபோது சுற்றுப்புற ஊரிலுள்ள குறிப்பிட்ட பெரும் புள்ளிகளுடன் நன்கு பழகு வேன். திருமணம், இறப்பு முதலிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதில் தவறுவதில்லை. அன்றிலிருந்து இன்று வரை சாதிவேறுபாட்டில் நம்பிக்கை இல்லாதவனாதலால் எல்லாச்

நி-2