பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 நினைவுக் குமிழிகள்-2

சாதியாரிடமும் நன்கு கலந்து பழகுவேன். இதனால் பள்ளி. வளர்ச்சிக்கும், மாணாக்கர்கள் நலனுக்கும் இவர்கள் பெரு

மளவில் பயன்பட்டனர். ஊர்ப் பெருமக்கள், வணிகப்

பெருமக்கள், சேடப் பெருமக்கள் இவர்களிடம் நன்கு பழகு

வேன். பள்ளி ஆண்டு விழாக்களுக்கும் சில முக்கிய நிகழ்ச்சி

கட்கும் ஒருகல் தொலைவைப் பொருட்படுத்தாது பெருங்

கூட்டமாகத் திரளுவர் ஊர்ப் பெருமக்கள். இவர்கள் வசதி

யின் பொருட்டே இத்தகைய நிகழ்ச்சிகளை ஞாயிறு அன்றே

வருமாறு அமைத்துக் கொள்வேன்.

நாற்பத்தொன்பது ஆண்டுகட்குப் பிறகு இப்போது நினைத்துப் பார்க்கின்றேன். காரைக்குடியில் வாழ்ந்த போதும், திருப்பதியில் வாழ்ந்தபோதும், இப்போது சென்னையில் வாழும்போதும் பல உயர்நிலைப் பள்ளிகள், கன்லூரிகளில் நடைபெறும் ஆண்டுவிழாக்கள், வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் இவற்றில் கலந்து கொண்டுள்ளேன். இவற்றில் ஆசிரியர்களின் பங்கையும் கவனிக்கின்றேன்; மாணாக்கர் களின் பங்கையும் கூர்ந்து நோக்குகின்றேன். இப்பொழுது நடைபெறும் விழாக்களில் - நகரங்களில் நடைபெறும் விழாக் களில் - அமைச்சர்கள் பங்கு பெறுகின்றனர். அரசியல் கூட்டம் வருகின்றது. கார்கள், ஆட்டோக்கள், ஸ்கூட்டர் கள் இவற்றை விழாக்கள் நடைபெறும் இடங்களில் காண முடிகின்றது. படாடோபங்கட்கட்குக் குறைவில்லை; எல்லாம் விளம்பரம்போல் காணப்படுகின்றன. ஆனால் சிற்றுாரில் வசதிக் குறைவுகளுடன் நிர்வாகத்தின் துணை சிறிது மின்றி ஊர்ப் பெருமக்களின் நன்கொடைகளைக் கொண்டு ஆசிரியர்களின முழு ஒத்துழைப்பையும் மாணாக்கர்களின் முழு உற்சாகத்தையும் பயன்படுத்தி நடத்திய விளையாட்டுப் போட்டி விழாக்கள், பள்ளி ஆண்டு விழாக்கள், மாண வர்கள் பங்கு கொண்டு நடத்திய நாடகங்கள், ஓரங்க