பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முதலாண்டு பள்ளி வரவு-செலவுக் கணக்கு iš

நாடகங்கள் போல நான் சென்ற இடங்களில் என்னால் காண முடியவில்லை. ஆனால் காரைக்குடியில் ஆசிரியப் பயிற்சிக் கல்லூரியில் பணியாற்றியபொழுது இப்பொறுப்பு என் வசத்திலிருந்தது; முதல்வர் முழுப் பொறுப்பையும் என்னிடம் விட்டு விட்டார். என் தோழப் பேராசிரியர் களும், பயிற்சிபெறும் மா ண க் க ஆசிரியர்களும் (Pupli - Teachers) மிகுந்த ஒத்துழைப்பை நல்கியதால் தரங் குறையாத சிறந்த விழாக்களை நடத்தி மகிழ்ந்திருக்கிறேன். இங்கு நிர்வாகமே அனைத்துச் செலவுகளையும் தாங்கிக் கொண்டதால் நன்கொடை தண்டும் பொறுப்பு இல்லா திருந்தது. அழகப்ப வள்ளலின் கொடைத்திறன் எல்லோர் வாழ்க்கையிலும் காணப்பட்டது. பிசுநாறித்தனத்தை எவரிடமும் காண முடிவதில்லை.

குமிழி. 67

3. முதலாண்டுப்பள்ளிவரவுசெலவுக்கணக்கு

பள்ளி நடைமுறையையும் கல்வித்துறைக்கு அனுப்ப வேண்டிய கணக்கு வழக்கு முறைகளையும் ஒரு புதிய தலைமையாசிரியர் தெரிந்து கொள்ள வேண்டிய செய்திகள் நிறைய உள்ளன. நாமே செய்தால் தான் அனைத்தும் அற்றுபடியாகும். செய்து கொண்டே கற்றல் (Learning by doing) என்பது கல்வி கற்றல் விதிகளுள் ஒன்று. இப்படி நாமே செயலில் இறங்கினால்தான் - முயன்று தவறிக் sÞpå gpsopustá (Trial - and error method) ziņu படையான பழக்கங்கள் எய்த வாய்ப்புகள் உண்டாகும். நானே மேற்கொண்ட செயல்களால் கற்றவை பல; பிறரது துணையால் கற்றவை சில.