பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முதலாண்டு பள்ளி வரவு-செலவு கணக்கு 21

இடைநிலை ஆசிரியர் ஒருவரைத் தலைமையாசிரியர் அறிமுகம் செய்து வைத்தார். மறுநாள் காலை ஒன்பது மணி முதல் எங்கள் பணியைத் தொடங்கத் திட்டம் இட்டுக் கொண்டோம்.

திட்டமிட்டபடியே மறுநாள் பணி தொடங்கப் பெற்றது. முதலில் பள்ளிக்கு மாணவர்களின் கட்டணம் மூலம் பெற்ற வருவாய், அரைக்கட்டணச் சலுகை தந்ததால் பள்ளியின் வருவாய் இழப்பு, மாணவர்களில் சிலர் நடுவில் படிப்பைக் கைவிட்டதால் தண்டல் செய்ய முடியாத நிலையால் ஏற்பட்ட இழப்பு போன்ற புள்ளி விவரங்களைத் தயாரிக்கும் முறையில் உள்ள நெளிவு சுழிவுகளையெல்லாம் காட்டிக் கொடுத்ததுமன்றிச் சரியான புள்ளி விவரங்களை என்னையே எடுக்கச் செய்து சரிபார்த்து உதவினார். அடுத்து, பல்வேறு செலவுகளைச் சரிபார்த்து அதற்கு வேண்டிய புள்ளி விவரங்களை என்னைக் கொண்டே செய்யச் செய்தார். இவற்றைச் முடிக்கச் சரியாக இரண்டு நாட்கள் ஆயின. இனி, பள்ளிக் கணக்கு வழக்குகளைச் சரிபார்ப்பது தண்ணிர்பட்ட பாடாக" என்னிடம் அமைந்தது. மூன்றாம் நாள் நான் பெருநிலக் கிழவரிடமும் பள்ளித் தலைமையாசிரியரிடமும் விடை பெற்றுத் துறையூர் திரும்பினேன். இதற்கெல்லாம் வழி காட்டின இடைநிலை ஆசிரியர் பெயரைக் கூட 49 ஆண்டுகள் கழித்து இதை எழுதும்போது நினைவு கூர முடியவில்லையே என்று வருந்துகின்றேன்.

தனியார் பள்ளிக் கணக்கு வழக்குகளைச் சரி பார்க்கவும் சரி பார்த்துக் கல்வித் துறைக்கு விவரங்களைத் தணிக்கை செய்ததற்கு சான்றிதழ் வழங்கவும் தனிப்பட்ட தணிக்கை யாளர் ஒருவரை நியமித்துக் கொள்ள வேண்டும் பள்ளி நிர்வாகம். காட்டுப்புத்தூர் உயர்நிலைப் பள்ளிக்குத்