பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 நினைவுக் குமிழிகள்-2

தணிக்கையாக இருந்தவர் திருச்சி மாநகரத்தைச் சார்ந்த நாராயணசாமி அய்யர் என்பவர். பல்லாண்டுகளாக இவரே இப்பள்ளிக்குத் தணிக்கையாளராக இருந்து வந்திருக் கின்றார். இப்பள்ளிக்கு முதலில் ரூ. 25).ஆக தணிக்கை யாளர் சம்பளம் தொடங்கி சிறிது சிறிதாக ரூ 50/-ஆக வளர்ந்திருந்ததைத் தலைமையாசிரியர் மூலம் அறிந்து கொண்டேன். இந்தக் கணக்கு வழக்குகளை அனுப்ப வேண்டிய முறையில் தயார் செய்து 4 படிகள் தட்டச்சு செய்வதற்கு ரூ 10|- தந்து வருவதாகவும் அறிந்து கொண்டேன்.

காட்டு புத்துாரிலிருந்தபோது அரண்மனையின் ஒதுக்குப் புறமாக இருந்த, ஆனால் உள்ளேயே இருந்த விருந்தினர் அறையொன்றில் தங்க இடம் தரப் பெற்றது: குளிப் பதற்கும் உறங்குவதற்கும் இது வசதியாக இருந்தது. அதிகாலையில் காஃபி, காலையில் சிற்றுண்டி, காஃபி (அல்லது பால்), நண்பகல் நல்ல உணவு, மாலை சிற்றுண்டி காஃபி, இரவு உணவு தரப் பெற்றன. யாரோ ஒர் இளைஞன் வந்து இவற்றை அன்புடன் பரிமாறிச் சென்றான். திரு. நந்திரெட்டியாரிடம் கடிதம் பெற்று வந்தயோது காட்டிய அன்பினின்றும் இப்போது காட்டிய அன்பு சற்றுக் குறைவாகவே இருந்தது. காரணம், நான் துறையூர் ஜமீன்தாரின் ஊழியன்தானே எள்று நினைத்துக் கொண்டார் போலும்!

துறையூர் திரும்பியதும் தாளாளர் துரையவர்களின் இசைவு பெற்றுத் திரு நாராயணசாமி அய்யருக்குத் தணிக்கையாளராக இருக்குமாறு வேண்டுகோள் விடுத்தேன். காட்டுப்புத்துTர்ப் பள்ளிக்கு உதவி வருவது போலவே துறையூர்ப் பள்ளிக்கும் உதவ வேண்டும் என்றும் கேட்டு எழுதியிருந்தேன். அவரும் ஒப்புக் கொண்டு ஒரு குறிப்பிட்ட