பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முதலாண்டு பள்ளி வரவு-செலவு கணக்கு 23

நாளில் அலுவலர் ஒருவரை அனுப்பி வைத்தார். அவர் பெயர் இராமநாதன் என்பது; அவர் என் வயதுடைய இளைஞராக இருந்தது பெருமகிழ்ச்சியைத் தந்தது. வந்து மூன்று நாட்கள் தங்கியிருந்தார். ஒரு பற்றுச் சீட்டு விடாமல் சரி பார்த்தார். தினசரி தண்டல் பதிவேட்டையும் பேரேட்டையும் பற்றுச் சீட்டுகளையும் இணைத்துக்கொண்டு கணக்குகளைத் தணிக்கை செய்தது என்னை வியக்க வைத்தது. சம்பளச் சலுகைகளால் பள்ளிக்கு ஏற்பட்ட இழைப்பையும், பள்ளிப் படிப்பை நடுவில் கைவிட்ட மாணவர்களிடமிருந்து த ண் ட ல் செய்ய முடியாத தொகையையும் தனிப்பட்ட முறையில் கணக்கிட்டு நான் கணக்கிட்டு வைத்திருந்த புள்ளி விவரங்களுடன் ஒப்பிட்டுச் சரியாக இருந்ததைக் கண்டு வியந்தார். தங்கள் தலைவர் நாராயணசாமி அய்யரின் அறிவுக் கூர்மை என்னிடம் தெரிவதாகப் புகழ்ந்தார். இஃது எனக்கு நாணத்தை விளைவித்தது. ஆனால் அஃது உண்மையான புகழுரை என்று எனக்கு நன்கு புரிந்தது.

இராமநாதன் தங்கியிருந்தபோது அவருக்கும் நடராச அய்யர் சிற்றுண்டி விடுதியில் சிற்றுண்டியும் முத்து அய்யர் உணவு விடுதியில் உணவுமாக வாங்கி வழங்கி உபசரித்தேன். காட்டுப்புத்துாரில் நடைபெற்ற மரியாதைக்கும் துறையூரில் நான் காட்டிய அன்புக்கும் வேறுபாடு இல்லையென்றாலும் உணவு வகையில் வேறுபாடு இருப்பதாகத் தெரிவித்தார் இராமநாதன். "காட்டுப்புத்துர் அன்பு பெருநிலக் கிழவ ருடையது; துறையூரில் அன்பு என்னுடையது' என்றேன். "அங்கு உணவு முதலியவை அரண்மனையைச் சார்ந்தவை: இங்கு அவை உணவுக் கடைகளைச் சார்ந்தவை' என்று சுட்டிக் காட்டினேன். இதனால் இரு இடங்களின் தராதரத்தை உணர்ந்து கொள்ள முடிந்தது.