பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 நினைவுக் குமிழிகள்-2

மூன்றாம் நாள் மாலை திருச்சி திரும்பிய இராமநாதன் 20 நாட்களில் கணக்குகளை நன்முறையில் தட்டச்சு செய்து மூன்று படிகளை அனுப்பி வைத்தார். இவற்றுள் இரண்டு படிகளை நன்முறையில் காக்கி நிறத்தாள் அட்டையாக வைத்துத் தைத்து ஒவ்வொரு அறிக்கையிலும் (Statement) என் கையெழுத்திட்டு, தாளாளர் கையெழுத்திற்கு அனுப்பினேன். ஜூன் 30தேதிக்குள் கணக்குகளின் இரண்டுபடி களை மாவட்டக் கல்வி அதிகாரிக்கு அனுப்பிவைத்தேன்.

காட்டுப்புத்துாரில் இருந்தபோதே தலைமையாசிரியர் அனுப்பவேண்டிய புள்ளிவிவர அறிக்கைகளை (Statistical returns) பற்றித் தெரிந்து கொண்டு வந்திருந்தேன். ஒரு சில நாட்களில் இவற்றைக் கையெழுத்துப் படிகளிலேயே தயாரித்து அனுப்பி வைத்தேன் மாவட்டக்கல்வி அதிகாரிக்கு. பத்து நாட்கள் கழித்து மாவட்டக்கல்வி அதிகாரியின் தலைமை எழுத்தர் திரு. எல். கணபதி அய்யரைச் சந்திக்க நேர்ந்தபோது "ஒரே ஆண்டில் பள்ளி நிர்வாகத்தின் நாடியைப் பிடித்துப் பார்க்க நன்கு கற்றுக்கொண்டு விட்டீர் கள்” என்று வெகுவாக என்னைப் பாராட்டினார். நானும் ஓரளவு அனைத்தையும் நன்கு கற்றுக்கொண்டு விட்டதாகப் பெருமிதமும் பூரிப்பும் அடைந்தேன். புதுப்பள்ளியாதலால் நான் எல்லாவிதப் பதிவேடுகளையும் கோப்புகளையும் (Files) தொடங்கி வைக்கவேண்டிய நிலையை உணர்ந்து பார்ப்போருக்குத்தான் நான் மேற்கொண்ட முயற்சி, பட்ட தொல்லைகள் முதலியவை தட்டுப்படும். 1946-ஆம் ஆண்டு முடிய ஆண்டொன்றுக்கு ரூ. 25/- கட்டணமும் ரூ. 10/தட்டச்சுக்கூவியுமாகத் தந்து வந்தேன். அதற்கு மேல் ரூ. 40+10 ஆக உயர்த்தியதாக நினைவு. -