பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 நினைவுக் குமிழிகள்-2

யில்-அநுபவத்தில் தான்-ஒவ்வொரு விதியின் தாற்பரியமும் அற்றுபடியாகும் என்பது நாளடைவில்தான் எனக்குப் புரிந்தது. நான் இளமை முதலே கலையுணர்ச்சி மிக்கவன். "செய்வன திருந்தச் செய்’ என்ற பாட்டியின் வாக்கை மறை மொழிபோல் போற்றி அதன்படிச் செயற்படுபவன். ஆகவே, கல்வித்துறைவிதிப்படி பள்ளியில் இருக்கவேண்டிய மாணவர் சேர்க்கைப் பதிவேடு, தினசரி தண்டல் குறிப்பேடு, மாணவர் கட்டணப் பேரேடு இவற்றை நல்ல தாளில் ஒவ்வொரு பத்தி யிலும் எழுதும் பொருளுக்கேற்ப இடம் அளவிட்டு அச்சிட்டு நன்முறையில் கட்டமைத்து வைத்துக் கொண்டேன். மாதக் கணக்கேடு கைப்படியிலே வைத்துக் கொள்ளப் பெற்றது. பற்றுச்சீட்டில் மாணவரின் சேர்க்கை எண்ணைக் குறிப்பிடு வதை விட வகுப்பு எண்ணைக் குறிப்பிடுவது உகந்தது. சரி பார்க்கவும் எளிதா இருக்கும் என்று கருதி அவ்வாறே செய்யப் பெற்றது. தொடக்கக் காலத்தில் சிந்தனையோடு செயற்படா விட்டால் கணக்கில் பல குளறுபடிகளும் சிக்கல்களும் நேரிடும் என்று கருதிக் கவனத்துடன் காரியங்கள் மேற்கொள்ளப் பெற்றன.

முதல் மூன்றாண்டுகட்கு எழுத்தர் நியமனம் செய்யப் பெறாமையால் இடைநிலை, ஆசிரியர்களின் ஒத்துழைப்பைக் கொண்டே அலுவலகப் பணிகள் நடைபெற்றன. அலுவலகத் தில் ஆள் இல்லாமையால் ஆசிரியர்களே கட்டணம் தண்டலை மேற்கொள்ள வேண்டியிருந்தது. ஆதலால் மாணாக்கர் களைச் சரியான சில்லறைகளுடன் வருமாறு பணிக்கப் பெற்றது. முதற்பொழுது வகுப்புக்குச் செல்பவர்கள் பத்து மணித்துளிகளில் பணம் தண்டவேண்டும் தண்டிய பணத்தை வகுப்பு, பிரிவு, வகுப்புஎண், மாணவர் பெயர், செலுத்திய தொகை இவை அச்சிடப் பெற்ற தாளில் எழுதி தண்டல் செய்த தொகையைஒரு தனிப்பட்ட காக்கித் துணிப்பையில்