பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நிர்வாகப் பொறுப்பை ஆற்றிய முறை 29

அதனால் பெறும் 'பாட்டநுபவத்தைப் போன்ற ஒருவித 'கணித அநுபவம்’ ஏற்படும். எங்காவது கூட்டும்போது கூட்டுப்புள்ளிகளில் தவறு நேரிடலாம்; கட்டணம் உரிய காலத்தில் செலுத்தாதலால் தண்டத் தீர்வையாக மாணாக்கர்கள் கட்டணத்துடன் கட்டிய சிறிய தொகைகள் விட்டுப் போகலாம் (விட்டுப் போகாதிருப்பதற்காகவே இத் தொகை சிவப்பு மையினால் பதியும் மரபை நுழைத்தேன்). தினசரி தண்டல் குறிப்பேட்டிலும், பின்னர்ப் பேரேட்டில் பதியும் போதும் மிக்க விழிப்புடன் பதிதல் வேண்டும். இதில் தவறுகள் நேர்ந்தால் மாத வரவு-செலவுக் கணக்கை முடிக்கும்போது தலைவலியை உண்டாக்கும்.

இன்னொரு முக்கியமான செய்தியும் உள்ளது. பற்றுச் சீட்டுகளை வைத்துக் கொண்டு பேரேட்டில் தண்டப்பெற்ற தொகை மாணவர் பெயருக்கு நேராகப் பதித்தல் வேண்டும். இந்தப் பணி திங்கள் தோறும் இருபதுதேதிக்குள் நிறைவு பெறல் வேண்டும். இப்பணி முற்றுப் பெற்றால்தான் கட்டணம் செலுத்தாதவர்களின் பெயர்ப்பட்டியல் தயாரிக்க முடியும். இவர்கள் மாத இறுதிக்குள் கட்டணம் தண்டத் தீர்வையுடன் செலுத்தத் தவறினால் அடுத்தமாதத்திற்குரிய Guðjsp&to LóGaulluscogjäg (Attendance Register) Quutt கள் நீக்கப்பெறும். பணப்புழக்கம் அதிகம் இல்லாத காலம்; ஏழைக் குடும்பத்திலிருந்து வரும் மாணாக்கர்களின் நிலையை அறிந்து வருந்தியிருக்கின்றேன். இந்நிலையைக் காணும்போதெல்லாம் நான் பள்ளியில் கல்வி பயின்ற காலத்தில் சிரமப்பட்டது நினைவிற்கு வரும். ஒன்று முதல் மூன்று படிவம்வரை பயிலும் மாணாக்கர்களிடமிருந்து ரூ. 2.12.0 (கு 2.75)மும், நான்கு முதல் ஆறு படிவம் வரை பயில்பவர்களிடமிருந்து ரூ 5-4-0 (ரூ. 5.25)மும் மாதாமாதம் ஒன்பது மாதம் தண்டப் பெறும். இதுதவிர ஒவ்வொரு