பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 நினைவுக் குமிழிகள்-2

பருவத்திலும் (Term) கீழ்ப்படிவ மாணவர்கள் நூலகக் கட்டணம் 0.8-0, விளையாட்டுக் கட்டணம் 0.12.0; தேர்வுக் கட்டணம் t=00 மேற்படிவ மாணவர்கள் நூலகக் கட்டணம் 0-12-0, விளையாட்டுக் கட்டணம் ரூ t=00ம் தேர்வுக் கட்டணம் 1-8-0ஆக சிறப்புக் கட்டணங்களாகச் செலுத்த வேண்டும். கட்டணம் உரிய காலத்தில் (மாதத்தில் 15 திங்கள்) செலுத்தாதவர்கள் மாத இறுதி வரை ரூபாய்க்கு ஒரனா வீதம் (கீழ்வகுப்பு மாணவர்கள் மூன்றணாவும் மேல் வகுப்பு மாணவர்கள் ஐந்தணாவும்) தண்டத்தீர்வையாகச் செலுத்த வேண்டும். இறுதி நாளில் தண்டத்தீர்வையுடன் செலுத்தாதவர்களின் பெயர்கள் நீக்கப் பெற்றால் நுழைவுக் கட்டணம் 0-8-0 சேர்த்துக் கட்டுதல் வேண்டும். இவை மாத முதல் நாளில் செலுத்தும் போது அந்த மாதத்திற்குரிய கட்டணமும் சேர்த்துச் செலுத்துதல் வேண்டும். இது ஏழைமக்க்ட்குப் பெருஞ் சுமையாக இருக்கும். ஏழை மாணவர்களின் நிலைக்கு இரங்கி ஒன்றிரண்டு நாட்கள் கணக்கு முடிக்காமல் வைத்திருந்து முன் தேதி போட்டு கட்டணத்தை வாங்கிக் கொண்டு நுழைவுக் கட்டணம் இல்லாமல் செய்த சந்தர்ப்பங்களும் இருந்தன. இவ்வுதவி என்னால் செய்யப்பெற்ற உதவியாக இருக்கும். ஏழைப் பெற்றோர்களின் வாழ்த்துக்கள் எனக்குக் கிடைத்துக் கொண்டிருந்தன.

முதல் மூன்று ஆண்டுகள் எழுத்தரை (Writer) நியமிக்காததால் நான்பட்ட சிரமத்தை அளவிட்டு உரைத்தல் இயலாது. இடைநிலை ஆசிரியர்களில் மிகத் திறமையான ஆசிரியர்களைக் கொண்டு இப்பணியை நிறைவேற்றிக் கொண்டிருந்தேன். டி.ஸ் . இரமய்யாவின் எழுத்து மணிமணியாக இருக்கும்; ஆதலால் புதிதாகச் சேர்ந்த மாணாக்கர்களின் பெயர்களை நுழைவுப்