பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நிர்வாகப் பொறுப்பை ஆற்றிய முறை 3i

பதிவேட்டில் (Admission register) இவரைக் கொண்டு எழுதுவித்தேன். தினசரி தண்டல் பதிவேடுகளில் பதிதல், பற்றுச் சீட்டுகளைத் தயாரித்தல் இப்பணிகளை இடைநிலை வகுப்பாசிரியர்கள் அனைவருமே செய்து உதவினர். 1945இல் தான் (ஜூன் மாதம்) மாவட்ட நீதிமன்றத்தில் அமீனாவாகப் பணியாற்றி ஒய்வு பெற்ற கே. சீநிவாச அய்யங்கார் அவர்கள் ரூ 20/- மாத சம்பளத்தில் எழுத்தராக நியமனம் பெற்றார். இதனால் அலுவலகப் பணியின் பளு சிறிது குறைந்தது. இவர் வந்த பிறகுகூட ஒராண்டு ஆசிரியர்களே கட்டணங் களைத் தண்டும் முறை கடைப்பிடிக்கப்பெற்றது. 1946-ல் மற்றோர் இளைஞர் ரூ251-ல் உதவி எழுத்தராகம் பணியேற்றார். சீநிவாச அய்யங்காரின் சம்பளமுப் ரூ 301-ஆக உயர்ந்தது. மாணாக்கர் தொகை பெருகிம் கொண்டே போனதால், கட்டணம் தண்டல் பணியுக் அவற்றை முறைப்படிக் கணக்கிட்டுப் பதிதல் பணியும் பெருகிக் கொண்டே வந்தன. இந்நிலையில் வி.எஸ். உமாபதி, எம். அரங்கசாமி என்ற இடைநிலை ஆசிரியர்களும், வ. இலக்குமண ரெட்டி, ச. கணபதி என்ற தமிழாசிரியர் களும் சேர்ந்தனர். இவர்கட்கு முன்னதாக P. மாத்ருபூதமும் உயர்நிலைத் தொடக்கப்பள்ளிப் பணியிலிருந்து விலகி இங்கு வந்து சேர்ந்துவிட்டார். இவர்களில் வி.எஸ்.உமாபதி மிகத் திறமைசாவி, எந்தப் பணியை நல்கினாலும் அதனை மிகத் திறமையாக நிறைவேற்றுவார். டி.ஸ். இராமய்யாவும் வி.எஸ். உமாபதியும் தொடர்ந்து தேவைப்படும் போதெல்லாம் அலுவலகப் பணியில் எனக்கு மிகவும் உதவினர்,

மேலிடங்களிலிருந்து வரும் கடிதங்களை நான்தான் பிரிப்பேன். பல்வேறு தலைப்புகளில் கோப்புகளைப் பாகுபாடு செய்து வைத்திருந்தேன். நாளாக நாளாக இத்