பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 நினைவுக் குமிழிகள்-2

தலைப்புகளும் பெருகி இருபதுக்கு மேற்பட்ட தலைப்பு களாயின. கடிதங்களையெல்லாம் ஆர அமரப் படிப்பேன் பதிலிறுக்க வேண்டாத கடிதங்களின் தலையில் File (கோப்பு) என்று எழுதிவிடுவேன்; பதிவிறுக்க வேண்டிய கடிதங்களின் தலையில் Reply (பதில்) என்று எழுதிவிடுவேன். முன்னவை யாவும் கோப்புகளில் அடங்கிவிடும். பணியாள் முத்துசாமி இப்பணியினை மிக அற்புதமாகச் செய்துவிடுவான். முதல் மூன்றாண்டுகளில் நானே இந்தக் கடிதங்கட்குத் தக்க முறையில் பதில் எழுதுவேன். தாளாளர் எழுத வேண்டிய பதில்களையும் நான்தான் எழுதி அவர் கையெழுத்திற்கு அனுப்புவேன். இதனால் பள்ளி நிர்வாகப் பொறுப்புகள் நன்கு அற்றுபடியாகிவிட்டன. K. பிச்சுமணி வந்து சேர்ந்த பிறகு கடிதங்கட்குப் பதில் எழுதும் பொறுப்புகளை அவருக்கு விட்டிருந்தேன். வாசகங்கள் சரியாக அமைந் தனவவா என்பதைச் சரிபார்த்த பிறகு அசல் கடிதம் தயாராகும். தாளாளர் அலுவலகம் என்ற ஒன்று தனியாக இல்லை. எல்லாப் பொறுப்புகளும் என் தலைமீது தான் இருந்தன. இதனால் பல பள்ளிகளை முன்னிருந்து நடத்து வதற்கேற்ற அநுபவம் பெற வாய்ப்பு ஏற்பட்டது. இஃது இறைவனின் திருவுள்ளக் குறிப்பின்படியே நடைபெற்றதாக இன்றும் நினைந்து போற்றுகின்றேன்.

குமிழ் -65

5. பள்ளி வளர்ச்சியில் இரண்டாம் ஆண்டு

இந்த ஆண்டு பள்ளியின் செங்குத்து வளர்ச்சியில் (Vertical growth) ஒன்றும் இல்லை; கிடைமட்ட வளர்ச்சி யில் (Horizontal growth) கணிசமான அளவு தென்பட்டது: மாணாக்கர் தொகை 250 ஐ எட்டத் தொடங்கியது. எட்டாம் வகுப்பில் ஒரு பிரிவுதான் இருந்தது. ஏழாம்