பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பள்ளி வளர்ச்சியில் இரண்டாம் ஆண்டு 35

தொடக்கப் பள்ளியில் நியமனம் பெறச் செய்து விட்டார் தாளாளர் துரை. சில வாரங்களில் ஆறாம் வகுப்பு (முதற் படிவம்) இரண்டாகப் பிரிந்ததால் இன்னோர் இடைநிலை பாகிரியர் தேவைப்பட்டார். P. மாத்ருபூதம் பணியில் அமர்ந்து விட்டதால் அவருக்குத் தொந்தரவு கொடுக்க விரும்பவில்லை. இந்நிலையில் 'எங்கிருந்தோ வந்தான்: இடைச்சாதி நான்' என்றான்' என்று பாரதியின் கண்ணனைப் போல் ' எங்கிருந்தோ ஒருவர் வந்தார்; சின்ன துரையைச் சந்தித்தார். துரையும் என்னைப் பார்த்து என்னிடம் விண்ணப்பம் தருமாறு பணித்ததால் என்னிடம் வந்தார். தன் பெயர் பிச்சுமணி என்று அறிமுகப் படுத்திக் கொண்டார். சிலதாள்கள் தருமாறு கேட்டார்; தந்தேன்.

ஒரு மூலையில் அமர்ந்து 20 மணித்துளிகளில் மிக அழகாக மூன்று பக்க அளவில் தம்மைப் பற்றி ஒன்றையும் விடாமல் செய்திகளைக் குறிப்பிட்டு விண்ணப்பம் தயாரித்துத் தந்தார். அவர் நடந்து கொண்டவிதம், விண்ணப்பம் தயாரித்த முறை, விண்ணப்பத்தில் கண்ட மணிமணியான கையெழுத்து, போன்றவை என்னைக் கவர்ந்தன. புதிய பள்ளியின் வளர்ச்சிக்கு ஒல்லும் வகை யெல்லாம் இவர் உதவுவார் என்று தீர்மானித்துக் கொண் டேன். இவரை நன்கு பயன் படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் நினைத்துக் கொண்டேன். என்னைப் போலவே சின்னதுரையும் இவர்பால் ஈர்க்கப் பெற்றதை அறிந்தேன். ஒன்றிரண்டு நாட்களில் மீண்டும் வந்து என்னைப் பார்க்கு மாறு பணித்தேன். K. பிச்சுமணி (அய்யர்) உப்பிவிய புரத்துக்கருகிலுள்ள பாலகிருஷ்ணம்பட்டியைச் சேர்ந்தவர்; அவ்வூரிலேயே நல்ல குடும்பத்தில் உள்ள ஒரு பெண்ணை மணந்து கொண்டவர். இடை நிலைத் தேர்வில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று மேற்கல்வியைத் தொடர முடியாமல் ஆசிரியப் பயிற்சி பெற்று அங்கும் இங்குமாக