பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பள்ளி வளர்ச்சியில் இரண்டாம் ஆண்டு 37

கொள்வதையும் மறந்து அலைவதைச் சின்னதுரை உணர்வ தில்லை. பாரவண்டியை இழுத்துச் செல்லும் மாடுகள் படும் பாட்டை வண்டியோட்டி நன்கு அறிவான். நிலையறிந்து வண்டியை நிழலில் நிறுத்துவான்: மாடுகட்கு நீர் விடாய் இருக்குமென்று உரிய நேரத்தில் தண்ணிர் காட்டுவான். மாலை நேரத்தில் பருத்திக் கொட்டை புண்ணாக்கு கலந்த பச்சரித் தவிட்டால் உண்பிப்பான். இந்த வண்டியோட்டி யின் இரக்கம் கூட இந்தச் சின்னதுரைக்கு இல்லையே என்று என்னையே நான் நொந்து கொண்டேன். பள்ளிக் கட்டட வேலையைக் கவனிக்கும் பொறுப்பெல்லாம் தலைமை யாசிரியருடையது என்று நினைத்துக் கொள்வார். கட்டடத்திற்குரிய சாமான்களை யெல்லாம் சேர்க்கும் வேலையாக எனக்குத் தரப்பெறவில்லை. அருகிலிருந்து வேலை வாங்கும் பொறுப்பு மட்டிலும் என் தலையில் விழுந்தது. இக்கடமையை நான் மகிழ்ச்சியாகவே ஏற்றுக் கொண்டேன். நான் கவனிக்கா விட்டால் மாணவர்கள் வசதிகேற்றபடிக் கட்டடங்கள் அமையா. பணிச்சுமையைக் கண்டு நான் என்றுமே முகம் சுழித்ததில்லை. பணி யாற்றும் என் திறமையைக் கண்டு சின்னதுரை ஒரு 'பாராட்டு மொழி கூட நல்கவில்லை என்பதுதான் என் குறை: பிறரிடமாவது என் உழைப்பைப் பாராட்டியிருக்கலாம். அதுவும் செய்யவில்லை. நான் படும் சிரமங்களையெல்லாம் பிறர்கண்டு அவர் காதில் போட்டதை அறிந்து கொண்டேன். 'பணியே பரமனின் வழிபாடு (work is worship) என்பதை அந்தப் பரமனே எனது பிறப்புரிமையாகத் தந்ததை அடிக்கடி எண்ணும்போது மெய் மயிர் சிவிர்க்கின்றது.

மூன்று வகுப்புகட்குக் கரும்பலகையைச் சுவரிலேயே அமைத்துக் கொண்டேன். இவற்றைத் தவிர ஆறு பலகை களைக் கரும்பலகைகளாக்கி அவற்றைப் பொருத்தி நிற்கக் கூடிய அமைப்பையும் முன்னரே திட்டமிட்டுத் தயாரித்து