பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 நினைவுக் குமிழிகள்-2

வைத்துக்கொண்டேன். வகுப்புகள் பெருகினால் உடனே இவை வேண்டுமல்லவா? எய்ப்பினில் வைப்பாக இருக்கட்டும் என்றே நான்கு பலகைகளைச் சேம வைப்பதாகத் தயாரித்து வைத்துக்கொண்டேன். இவை தவிர ஆறு மேசைகள், ஆறு நாற்காலிகள், ஆறு பீரோக்கள் (கண்ணாடி முகப்புடையவை நான்கு; கண்ணாடி முகப்பற்றவை இரண்டு) தயாரிக்கப் பெற்றன. நாற்காலிகள், மேசைகள் வகுப்பில் ஆசிரியர்கட் குரியவை; கண்ணாடி முகப்புடைய பீரோக்கள் நூலகத்திற் குரியவை; ஏனையவை அலுவலகத்திற்குரியவை. நூலகம் பள்ளியின் இதயம் போன்றது என்பதை நான் நன்குணர்ந்த வனாதலால், ஆண்டுதோறும் மாணாக்கர்களிடமிருந்து தண்டப்படும் கட்டணத்தைக் கொண்டே நல்ல தரமான து.ால்களை வாங்கி நூல் வளத்தைப் பெருக்கிக் கொண்டே வந்தேன். இவை யாவும் ஒரு தனி அறையில் கண்ணாடி பீரோக்களில் பாதுகாப்பாக வைக்கப்பெற்றன. வாங்கிய நூல்களை நூலின் பெயர், ஆசிரியர் ெயர், பெற்ற கம்பெனி, விலை என்ற விவரங்களுடன் பதிவு செய்ய ஏற்பாடுகள் செய்து வைத்தேன். வேறொரு பதிவேட்டில் தமிழ், ஆங்கிலம், அறிவியல், புவியியல், வரலாறு என்ற நூல்களைப் பிரிவினை செய்து குறிக்கவும், குறித்தவாறே எடுப்பதற்கு எளிதாக இருப்பதற்கு நூல்களையும் வகைப் படுத்தித் தனித்தனிக் கண்ணாடி அலமாரிகளில் வைக்க ஏற்பாடுகள் செய்தேன். > -

இரண்டாம் ஆண்டே புவியியல், வரலாறு பாடங்களை நன்முறையில் கற்பிப்பதற்குத் துணையாக இருக்கும் பொருட்டுத் தேசப்படங்கள் (Maps), பூவுண்டை (Globe), போன்றவற்றை வாங்கி ஆசிரியர்கள் அமரும் அறைக்கு அருகிலுள்ள ஓர் உள்அறையில் பாதுகாப்பாக அடுக்குமுறை அமைப்பில் வைத்துக்கொள்ள ஏற்பாடுகள் செய்தேன். அங்ங்னமே உடற்கூறுகளை நன்கு விளக்கும் முறையில்