பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பள்ளி வளர்ச்சியில் இரண்டாம் ஆண்டு 39

அமைந்த விளக்கப்படங்களை (Charts) வாங்கிப் பாது காப்பாக வைத்துக் கொள்வதற்கும் ஏற்பாடுகள் செய்தேன்.

மூன்று வகுப்புகட்கான இருவர் உட்காரும் சாய்வு மேசைகள், ஆறு ஆசிரியர்கட்கான மேசை நாற்காலிகள்: அறிவியல் தளவாடப் பொருள்கள் வைப்பதற்கான நான்கு அலமாரிகள் போன்றவை செய்வதற்காக மானியம் பெறு வதற்கு உத்தேச விலைகள் (Estimates) தயாரித்து கல்வித் துறை இயக்குநருக்கு முறைப்படி விண்ணப்பம் அனுப்பினேன் இவையெல்லாம் கிடைக்கும் என்று நம்பியே முற்கூட்டியே எல்லாப் பொருள்களையும் தயாரித்தற்குரிய ஏற்பாடுகளைத் தொடங்கி வகுப்புத் தேவைகட்குக் குந்தகம் விளையாமல் வேண்டிய பொருள் களையெல் லாம் தயாரித்துக் கொண்டேன். எல்லாப் பொருள்களும் தேக்கு மரத்தா லானவை. மாணாக்கரிடம் தண்டப்படும் கட்டணங்களைக் கொண்டே இவையனைத்தும் தயாராயின. ஆசிரியர்க்குத் தான் முறையான, ஒழுங்கான, நியாயமான சம்பளம் இல்லையே. இதனால் கட்டணத்தால் பெறும் நிதியே மிதமிஞ்சி இருந்தது. நிர்வாகத்தின் கையைக் கடிக்கவே இல்லை. -

. குமிழி-70 இரண்டாம் ஆண்டின் சிறப்பு நிகழ்ச்சிகள்

இந்த ஆண்டு பள்ளியின் தூல வளர்ச்சிக்குரிய பல செயல்கள் மேற்கொள்ளப் பெற்றன. இவற்றிலெல்லாம் என் சொந்த வேலைகள் என்பனவாகக் கொண்டு என்னை நன்கு உட்படுத்திக் கொண்டேன். அடிக்கடி சின்ன துரையைச் சந்தித்து பள்ளியின் பெயரில் ரூ. 5000/-ஐ நிலையான நிதியாகப் (Fixed Deposit) போடச் செய்தேன்.