பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 நினைவுக் குமிழிகள்-2

துறையூரில் அந்தக் காலத்தில் இருந்த ஆறு நாட்டு வேளாளர் பாங்கியில் இந்தத் தொகை மூன்றாண்டுத் தவணையில் போடப்பட்டது.

நிர்வாகம் அப்போதைய பள்ளிக் கட்டடத்திற்கு எதிரில், துறையூர்-திருச்சி நெடுஞ்சாலைக்குக் கீழ்ப்புறமாகப் பத்து ஏக்கர் நிலம் வாங்கியது. எதிர்காலத்தில் பள்ளியின் பன்முக வளர்ச்சிக்கு இதுபோதும் என்ற மனநிறைவினைத் தந்தது. சின்னதுரை சிக்கணக்காரர் (கஞ்சப் பிரபு என்றுகூடச் சொல்லலாம்; பிசுதாறி என்று சொல்லும் அளவுக்குத் தகுதி பெற்றவர்); இலெளகியம் நன்கு அறிந்தவர். பங்களாவின் நாலு சுவர்களுக்குள் அடங்கியிருந்தவாறே தமக்கேற்ற அமைச்சர்களாக இருந்துவந்த இலிங்க அய்யர் (பெருநிலக் கிழவர் உயர்நிலைத் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுள் ஒருவர்), செ. பெருமாள் ரெட்டியார் (துறையூருக்கருகிலுள்ள வாலிஸ்பரம் என்ற சிற்றுரரில் வாழ்ந்தவர்; நாள் முழுவதும் துறையூரில் நடமாடுபவர்), இன்னும் சிலர் (அவர்கள் பெயர் களை நினைவு கூர முடியவில்லை) ஆகியவர்களைக் கொண்டே அற்புதமாகச் செயலாற்றுபவர்.

இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன்கண் விடல்.’ என்ற திருக்குறளின் கருத்தை நடைமுறைப்படுத்திக் காட்டியவர். இவர்களுள் யாரோ ஒருவரின் உதவியால் நிலம் விற்கும் உளவு தெரிந்து பத்து ஏக்கர் நிலத்தைக் குறைந்த விலைக்கு வாங்கி விட்டார். இது பள்ளி முன்னேற்றத்திற்குப் பெரிய சாதனையாகும்.

அடுத்து, ஆற்றப்பெற வேண்டிய செயல்கள் பல இருந்தன. இவற்றில் இறங்குவதற்கு முன்னர் மாவட்டக்

l. குறள்.517 (தெரிந்து வினையாடல்)