பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 நினைவுக் குமிழிகள்-2

பக்கமாகத் திரும்பி எனக்கு முன் வந்தவரிடம். அரட்டை யைத் தொடர்ந்தார். என்னுடைய இளமையைக் கண்டு என்னிடம் குழைந்து பேச மன மில்லாவிட்டாலும், நான் வகித்த பதவியைக் கருதியாவது பண்பாடுள்ள மரியா தையைக் காட்டியிருக்கலாம். நானே ஒரு பிராமண இளைஞனாக இருந்திருந்தால் வேறுவிதமாக நடந்து, கொண்டிருப்பார் என்று என் மனம் எண்ணத்தொடங்கியது. இப்போது,

உரைமுடிவு,காணான்

இளமையோன் என்ற

நரைமுது மக்கள்

உவப்ப-நரைமுடித்துச்

சொல்லால் முறைசெய்தான்

சோழன் "

என்ற பழமொழிப் பாடலை நினைத்துக் கொண்டேன். முழுக்கை சட்டை, அங்கவஸ்திரம் இன்றிகோட்டும் சூட்டும் பூட்டுமாக, வந்திருந்தால் (இதுதான் நான் பள்ளியில் தலைமையாசிரியனாக மேற்கொண்ட கோலம் - பள்ளி நேரத்தில்தான் இந்த வேடம்) ஒருகால் நடராச அய்யர் என்னைக் கவனித்து இருப்பாரோ என்று நினைத்துக் கொண்டேன். நாற்காலியில் எனக்கு இருப்புக் கொள்ள வில்லை. இதனை நடராச அய்யரும் புரிந்து கொண்டார். உடனே, ரெட்டியார்வாள், ஒரு நாள் சாவகாசமாக வாருங்கள். நீங்கள் வந்தவிஷயத்தைப்பற்றி விரிவாக விளக்கமாகப் பேசலாம். நான் உங்கட் வேண்டிய வற்றையெல்லாம் செய்யக் காத்திருக்கின்ந்ேது என்றார். *வெளியே நட: உனக்கு இங்கு வேலை இல்லை என்று சொல்லுவது போலிருந்தது அவர் பேசிய தோரணை. நான்

3. பழமொழி-6