பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 நினைவுக் குமிழிகள்-2

இடத்திலுமாகக் கல்வி பெற்று வருகின்றனர். மனைவி வேறோர் இடத்தில் ஒரு பெரிய மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இவர்கள் மூவரும் அதிகாரி மாற்றப் பெற்ற இடத்திற்கு ஏப்ரல் மாதம் வந்து சேர்கின்றனர். ஆயிரம் கிலோ எடையுள்ள சாமான்களை அதிகாரி தன்னுடன் எடுத்துச் செல்லுகின்றார். எல்லோருக்கும் பயணப்படி உண்டு; அதிகாரி தன் பதவி நிலைக்கேற்ப இவ்வளவு எடைதான் எடுத்துச் செல்லலாம் என்ற கணக்கு உண்டு. அவற்றிற்கு மட்டிலும் வண்டிச் சத்தம் ஏற்றுக் கொள்ளப்பெறும். இந்த அதிகாரிக்குப் பயணப்படி கணக்கிடுதல் வேண்டும். கணக்கிலேயே இருப்பூர்தி முதல் வகுப்பு இரண்டாம் வகுப்பு பயணப் படியின் விகிதம், பேருந்து குதிரை வண்டியின் கட்டணங்கள் கொடுக்கப் பெற்றிருக்கும். அதிகாரியின் தகுதிக்கேற்ப முதல் வகுப்பு இரண்டாம் வகுப்பு பயணப் படியைக் கணக்கிடுதல் வேண்டும். ஆய்வுக்காகச் செல்லும்போது பயணப் படியின் அளவு ஒருவிதமாகவும் (ஒரு முதல் வகுப்பு என்றாற் போல) மாற்றலாகிப் போகும்போது வேறொரு விதமாகவும் (14, 18 18, 18 முதல் வகுப்பு என்றாற்போல) இருக்கும். அதிகாரியின் தகுதிக்கேற்ப இது மாறுபடும், இங்ங்ணம் பயணப் படிகளைக் கணக்கிடும்போது சட்ட நூலிலுள்ள விதிகளையும் குறிப்பிட்டுக் காட்டுதல் வேண்டும். -

நான் தேர்வு எழுதின போது இந்த இரண்டு வகைப் பயண வகைகளையும் இணைந்துக் கேட்கப் பெற்றிருந்தது. ஓர் அதிகாரி (தகுதி, பணியாற்றும் துறையைக் குறிப்பிட்டு) ஆய்வுப் பணியில் (Inspection) ஈடுபட்டுப் பல இடங்கட்குப் போய் கொண்டிருக்கையில் வேறோர் இடத்திற்குப் போய்ச் சேருமாறு ஆணை பிறப்பிக்கப் பெற்றது. சேர்வதற்குப்