பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 நினைவுக் குமிழிகள்-2

அறியக் கூடவில்லை. சில ஆண்டுகள் கழித்து அவர் திருநாத்

அலங்கரித்த செய்திதான் எனக்கு எட்டியது. என் வாழ்க்கை' யில் இத்தேர்வினால் யாதொரு பயனும் அடையா

விட்டாலும் அரசுப்பணியில் உள்ள பிரச்சினைகளை

அறிந்து கொள்ள இத்தேர்வு வழி காட்டியாக அமைந்தது.

- குமிழி 72 8. இரண்டாண்டுப் பணியில் கிளம்பிய ஒரு சிறு புயல்

6ான் பணியாற்றி வந்த இரண்டாம் ஆண்டில் என் வாழ்க்கையில் பணி வாழ்க்கையில் - ஒரு சிறு புயல் கிளம்பியது. இறையருளாலும் சில பெரியோர்களின் தலை பீட்டாலும் அஃது அடங்கியது. அதனை இந்தக் குமிழியில் வெளியிட எண்ணுகின்றேன். சோதிடர்கள் ஒருவர் வாழ்க்கையில் நேரிடும் இடர்ப்பாடுகட்கும் துன்பங்கட்கும் தொல்லைகட்கும்; நல்ல சூழ்நிலை ஏற்பட்ட ஒருவர் முன்னேற்றப்பாதையில் நடைபோட்டுக் கொண்டு செல்வ தற்கும் நற்கோள்கள் தியகோள்கள் இவை இருக்கும் இடம், பார்வையின் கோணங்கள் இவற்றின் அடிப்படையில் பலன் கள் சொல்வர்; காரணங்களையும் விளக்கிக் கூறுவர். சில சமயம் கோள்கள் நிலைகளையறிந்து பரிகாரம் செய்ய வேண்டும் என்பர். சோதிடத்தில் நம்பிக்கையுள்ளவர்கள் பரிகாரங்களையும் தவறாது செய்வர்.

நான் துறையூரில் பணியாற்றிய தொடக்கக் காலத்தில் கல்வியுலகில் கோள்களின் நிலை இவ்வாறு இருந்தது. திருச்சியில் மாவட்டக் கல்வி அதிகாரி சி. இரகுநாதன், அவருக்குத் தனி அலுவலர் எஸ் வீராசாமி பக்தர் தலைமை எழுத்தர் எல். கணபதி அய்யர் கோவையில் மண்டலப்பள்ளி