பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரு சிறு புயல் 53

estùaurrerff (Divisional Inspector of Schools) est. gyít. அரங்கநாதமுதலியார்; அலுவலக மேலாளர் சி.வி. சுப்பிர மணியம். சென்னையில் பொதுக் கல்வி இயக்குநர் ஆர்.எம்." ஸ்ட்ராத்தம் துரை; இவர் வெள்ளைக்காரர்; திருமணம் ஆகாதவர். இவர்களைத் தவிர பொதுக்கல்வி இயக்குநர் அலுவலகத்தில் என் ஆசிரியப் பெருந்தகை கே. இராமச்சந்திர அய்யரால் அறிமுகம் செய்து வைக்கப் பெற்றவர் வி. எஸ். இராமச்சந்திர அய்யர், இவர்கள் ஒவ்வொருவரும் நடுநிலைப்பள்ளி உயர் நிலைப்பள்ளியாக வளர்வதற்கு எவ்வெவ்வகையில் உதவினர் என்பதை அடுத்துவரும் குமிழிகளில் தெரிவிப்பேன், ஒவ்வொருவரையும் அணுகு முறையையும் சுட்டிக் காட்டுவேன்.

நான் துறையூரில் பணியாற்றத் தொடங்கியபோது முசிறியில் மூத்த உதவிக் கல்விஆய்வாளராக இருந்தவர் சி. சிங்காரவேலு முதலியார் இவர் புதிதாகத் தொடங்க இருந்த நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்பணிக்கு நான் அனுப்பியிருந்த விண்ணப்பம், சான்றிதழ்களின் நகல்கள் முதலியவற்றைப் பார்த்து முத்து வேங்கடாசல துரையிடம் "விலைமதிக்கமுடியாதமாணிக்கம்’ என்று என்னை வருணித்த தாகவும், என்னை நியமித்துக் கொண்டால் பள்ளி வளர்ச்சி நன்றாகஇருக்கும் என்றுசொன்னதாகவும்,எனக்குத்துறையூர் உயர்நிலைத் தொடக்கப் பள்ளியில் தலைமையாசிரியராக இருந்த டி. எஸ். இராசகோபால் அய்யர் சொல்லக்கேட்ட துண்டு. இவரை அடுத்து முசிறியில் அப்பதவியை ஏற்றவர் கே. எல். பழகிசாமிப் பிள்ளை. இவர்கள் அப்பகுதியில் பணியாற்றிய காலத்தில் எனக்கு ஒல்லும் வகையெல்லாம் உதவியமைக்கு 'தலை அல்லால் கைம்மாறு இலேன்'

1. நாச். திரு. 5 (குயில்பத்து).