பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

53 நினைவுக் குமிழிகள்-2 என்பதை நன்கு உணர்ந்தவர். என்னுடைய உழைப்பையும் பள்ளி வளர்ச்சியில் என் முழுமையான ஈடுபாட்டையும் நன்கு உணர்ந்தவர். இவர் ஒரு நாள் துடை நடுங்கி துரையைச் சந்தித்து மனம் விட்டுப் பேசினார், 'மாவட்டக்கல்லியதி காரியின் பரிந்துரைக்குச் செவிசாய்க்க வேண்டா. நம் ரெட்டியாரைப் போல் உங்கட்கு ஒர் ஆள்கிடைப்பது கஷ்டம். அவருக்குத் தெரியாத தொன்றும் இல்லை. இரவு பகலாக உ ைமுக் கி ன் றார். முத்த தலைமையாசிரியர்களிடம் (திருவேங்கடம் பிள்ளை, பி. ஆர். சுப்பிரமணிய பிள்ளை முதலியோர்) கலந்துரையாடி பல்வேறு புதிய செய்திகளைத் தெரிந்து கொள்கின்றார். கல்வித்துறை விதிகள் இவருக்கு அற்றுபடியாய் விட்டன. நானே ஒன்றரையாண்டுக் காலத் தில் எழுத்தரேயின்றி இவர் ஆற்றிய பணியைக் கண்டு வியந்து போனேன். என்னை இப்பணியில் ஈடுபடுத்தினாலும் என்னால் இவ்வளவு குறுகிய காலத்தில் இவ்வளவு நிறையப் பணியை இவ்வளவு திறமையாக ஆற்றமுடியாது என்பதை ஒப்புக் கொள்கிறேன். தயவு செய்து எவரையும் கொணர்ந்து பணியில் அமர்த்த வேண்டா. இதனால் ரெட்டியாரின் மனம் உடைந்து போகும்; மாவட்டக் கல்வியதிகாரி தமக்குக் கல்வித்துறை இயக்குநரிடம் செல்வாக்கு இருப்பதாக மாயா ஜாலத்தைக் காட்டி ஏமாற்றிவருகின்றார். அவர் பேச்சிற்குச் செவிசாய்க்க வேண்டா. என்று கூறி ஒருவாறு மனத்தை மாற்ற முயன்றார். ஆனால் அவர் மாற்றலாகிச் சைதாப் பேட்டை மாவட்டக்கல்வி அதிகாரியின் தனி அலுவலராக நியமனம் பெற்றுவிட்டார். - -

அடுத்து வந்தவர் கே. எல். பழநிசாமிப்பிள்ளை சிவ பக்தி மிக்கவர். எப்போதும் வெண்ணிறும் சந்தனப்பொட்டும் இவர் நெற்றி யை அலங்கரிக்கும். நல்ல தமிழ்ப் பற்றுமிக்கவர். என்னுடைய தமிழ்ப் பற்று இவரை என்பால் சர்த்துக் கொண்டது. பள்ளிக்கு வரவழைத்து நான் மேற்கொண்ட பணிவகைகளை எல்லாம் இவருக்கு எடுத்துரைத்துப்