பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரு சிறு புயல் ; 59

பார்க்கச் செய்தேன். அவர் குறுகிய காலத்தில் சிறிதும் அநுபவம் இல்லாத நான் திறமையுடன் ஆற்றியிருக்கும் பணியைக் கண்டு வியந்து போனார். அநுபவம் மிக்க எவராலும் இவ்வளவு திறமையுடன் ஆற்றமுடியாது’ என்று வாய் திறந்து சொல்வியே விட்டார். இவர் மாவட்டக்கல்வி அதிகாரியுடன் ஆய்வுக்கும் வந்திருந்தார். இக்காரணத்தை முன்னிட்டுப் பள்ளித் தாளாளரைச் சந்தித்து என்னைப் பற்றிப் பாராட்டிப் பேசினார். மாவட்டக்கல்வி அதிகாரி. அதுபவம் மிக்க ஒருவரை நியமிக்க வேண்டும்” என்று ஆய்வு அறிக்கையில் எழுதட்டும் துணிவு இருந்தால் ' என்று கூறி விட்டார். அப்படி அவரால் எழுதவும் முடியாது என்பதையும் உறுதிப்படுத் தினார், இந்த ஆண்டு பள்ளி ஆய்வு அறிக்கையும் (இரண்டாம் ஆண்டு) மிகச் சிறப்பான முறையில் அமைந்து விட்டது. தாளாளர் கல்வி அதிகாரியின் திட்டத்தை நிறை வேற்றுவதில்லை என்ற முடிவு எடுத்துவிட்டார் என்பதை பழநிசாமிப்பிள்ளையின் மூலமே அறிந்து கொண்டேன். மன அமைதி கொண்டேன், புதிய உற்சாகத்துடன் பணியாற்றத் தொடங்கினேன். இந்தச் சிறுபுயல் தோன்றி மறைந்ததை என்தோழ ஆசிரியர்கள எவரும் அறியார். நாளடைவில் நான் சொன்னபிறகுதான் அவர்கட்குத் தெரிந்தது. எங்கள் பள்ளிக்குடும்பத்தில் நான் எதையும் மறைவாக வைத்துக் கொள்வதில்லை. வெள்ளை வாயன்' என்ற பட்டமும் சிலர் சூட்டியதாக அறிந்து மகிழ்ந்தேன். இப்ப்ண்பு தோழ ஆசிரியர்கள் என்னிடம் மிக நெருக்கமாகப் பழகுவதற்கும துணை செய்தது. இத்தகைய பண்பினால் நன்மை நிறைய இருந்தது. சிறு சிறு தீமைகளும் விளைந்தன. தீமைகளைச் சமாளிப்பதில் பொனனான காலம் வீணாவதைக் கண்டு வருந்தியதுண்டு. அதுவத்தில்தான் நெளிவு சுழிவுகளை யெல்லாம அறிந்து கொள்ள முடியும். இறைவன் துணையும் அவசியம் வேண்டும் அவனன்றி ஒர் அணுவும் அசையாது" என்பதில் நம்பிக்கை இருந்தால் போதுமானது.