பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பட்டம் பெறுவதில் மேற்கொண்ட முயற்சிகள் 61

நனவாக்க முயன்றேன் அதில் பல தடைகள்; இத்தடைகளை யும் இவற்றை வெற்றியுடன் அகற்றின நிலையையும் இக் குமிழியில் வெளியிடுகின்றேன்.

1943 இல் என நினைக்கின்றேன். மூன்று ஆண்டுகள் ஆசிரியத் தொழிலில் பணியாற்றினவர்கள் மேல்படிப்பிற்கு அருகதையுள்ளவர்கள் என்ற பல்கலைக் கழக விதியைப் பயன் படுத்திக் கொண்டு எம். ஏ. படிப்பதற்கு விதிவிலக்கு (Exemption) அளிக்க வேண்டும் என்ற விண்ணப்பம் அனுப்பி னேன். பி. எஸ்சி பட்டம் பெற்றவர்கள் எம்.ஏ. தேர்வு எழுத இயலாது, எம் எஸ்.சி. தேர்வுதான் எழுதலாம் அதற்கு ஆய்வகப் பயிற்சி வேண்டுமாதலால் அதுவும் எழுத முடியாது என்ற மறுமொழி வந்தது பல்கலைக் கழகப் பதிவாளரிட மிருந்து, எனக்கு ஒரே ஏமாற்றம்; அதிர்ச்சி. உடனே பி.ஏ. தேர்வு எழுதி வெற்றி பெற்ற பிறகு எம்.ஏ. தேர்வுக்கு முயலலாம் என்று கருதி அதற்குரிய விண்ணப்பம் அனுப்பி னேன். உடனே பதிவாளரிடமிருந்து முதன்மைப் பட்டம் (Primary Degree) பெறாதவர்கட்குதான் இந்தச் சலுகை உண்டு. தாங்கள் பி. எஸ்.சி. எல்.டி. பட்டங்கள் பெற்றிருப் தால் இந்தச் சலுகையைப் பெறுவதற்கு இல்லை என்ற மறு மொழி வந்தது. இதற்கு நான் (l) இடை நிலைவகுப்பு (intermediate) தேர்வு பெற்றதாகவும், (2) எல்.டியை இடை நிலைப்பயிற்சி பெற்ற சான்றிதழாகவும் (3) மூன்றாண்டுகள் ஆசிரியப்பணி ஆற்றியிருக்கும் அநுபவத்தையும் கொண்டு எனக்கு இந்தச்சலுகை அளிக்க வேண்டும் என்று மீண்டும் எழுதினேன். 'இதுதான் பல்கலைக் கழகத்தின் மரபு; ஆகவே மரபை மீறுவதற்கிலை” என்ற மறுமொழி வந்தது ஆசிரியர்க்குரிய சலுகை எனக்கு உண்டு; அந்த உரிமையை எனக்குப் பல்கலைக் கழகம் வழங்கவேண்டும். தங்களால் ஒரு முடிவுக்கு வரமுடியவில்லை யானால், இதுகாறும் நம் மிடையே நடைபெற்ற கடிதப் போக்குவரத்துகளை ஆட்சிக்