பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பட்டம் பெறுவதில் மேற்கொண்ட முயற்சிகள் 63

அன்புடன் கூறினார் அருள்மிகு ஜெரோம் பாதிரியார் (அப் போது லயோலா கல்லூரி முதல்வராக இருந்தார்). நான் “தாங்கள் திருச்சிபுனித சூசையப்பர் கல்லூரியில் முதல்வராக இருக்கும்போது பி.எஸ்சி ஆனர்ஸ் (இயற்பியல்) படிக்க என் உடல் நலம்கருதி மறுத்தீர்கள். அது படித்திருந்தால் இப் போது இவ்வளவு முயற்சி எடுக்க வேண்டியதில்லை தலைமை யாசிரியர்களை 25 சதவிகித இடத்திற்கு மாவட்டக் கல்வி தியகாரிகளாகத் தேர்ந்தெடுக்கின்றனர். அதற்குள ம்.ஏ. அல்லது எம்எஸ்சி.டி.பத்திருக்கவேண்டும் என்ற விதி உள்ளது. அதற்குத் தகுதியாக்கிக் கொள்ளவே இம் முயற்சி, தாங்கள் எப்படியாகிலும் எனக்கு ஆசி கூறவேண்டும்” என்று அவரை வேண்டினேன். முயல்வேன்' என்ற உறுதி கூறினார் அப் பெருந்தகை. பேராசிரியர் எஸ். கோவிந்தராஜுலு நாயுடு 'வைச் சட்டக் கல்லூரியில் சந்தித்து இதனைக் கூறினேன். குஸ்தோம்” (பார்க்கிறேன்) என்று கூறி என் விடாமுயற்சி யைப் பாராட்டினார். அடுத்து நீதிபதி பவrர் அகமதுவை ஆழ்வார்பேட்டையில் அவர் இல்லத்தில் சந்தித்து என் கோரிக்கையை விளக்கியதுடன் ஜெரோம் டிசெளபொ, பேராசிரியர் எஸ். கோவிந்தராஜுலு நாயுடு இவர்களைச் சந்தித்துப் பேசினதையும் எடுத்துக் கூறினேன். நீதிபதியும் என்னால் இயன்றதை யெல்ாலம் செய்வேன். உங்கள் விடா முயற்சியைப் பாராட்டுகின்றேன்' என்று கூறி விடை கொடுத்தார்!

இதற்குரிய முடிவு இழுபறியாக இருக்கும் என்பதை ஊகித்தேன். 'இது பல்வேறு குழுக்களின் பரிசீலனைக்குப் போகவேண்டும். இந்தக் குழுக்களும் ஆறு திங்கள், மூன்று திங்கள் என்ற தவணைகளில்தான் கூடும். ஒவ்வொரு குழுக்களிலும் உறுப்பினர்களிடையே கருத்து மாறுபாடு களும் இருத்தல் கூடும். இவற்றையெல்லாம் சமாளித்து முடிவு பிறக்கவேண்டும். இதற்குக் காலதாமதம் ஏற்படுவது இயல்பு” என்று கருதி இம்முயற்சியை இந்த அளவில் விட்டு