பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 நினைவுக் குமிழிகள்-2

வைத்தேன். இவ்வாறு நான் முயல்வதைப் பலர் அறிந்தார் கள். சிலர் என்னைப் பாராட்டினர்; சிலர் என்னை மறை முகமாகக் கிண்டல் செய்தனர். சிலர் என்னை இளமைத் துடுக்கு’, என்று பரிகசித்தனர். இச்செய்திகள் எல்லாம் என் செவிக்கு எட்டின, இவையும் என் முயற்சிக்கு ஊக்க மளித்தன. என் முயற்சி கெளரவப் பிரச்சினையாக மாறி விட்டது.

"தமிழ் படிக்கவேண்டும் என்ற உந்தல் (Drive) என்னை மற்றொரு திசையில் செயற்படத்துாண்டியது. 1943 ஆம் ஆண்டு வித்துவான்-முதல்நிலை (Preliminary)தேர்வு எழுது வதற்கு விதிவிலக்கு (Exemption) வழங்குமாறு விண்ணப்பம் உரிய காலத்தில் கட்டணத்துடன் சென்னைப் பல்கலைக் கழகத்திற்கு அனுப்பினேன்; அதற்குரிய இசைவும் பெற்றேன். 1944 மார்ச்சில் நடைபெறும் தேர்வுக்குக் கட்டணம் அனுப்பி, தேர்வு எழுதி வெற்றியும் பெற்றேன். பல்வேறு பணிகளுக்கிடையே இரவும் பகலும் ஓயாது படித்து தேர்வு எழுதி வெற்றி பெற்றது பெரும் சாதனை என்றே கருதுகின்றேன். இங்ங்னமே 1944 இல் உரிய காலத்தில் வித்துவான் - இறுதிநிலை (Final) தேர்வு எழுதுவதற்கு கட்டணத்துடன் விண்ணப்பம் அனுப்பி அதற்குரிய இசைவும் பெற்றேன். 1944 திசம்பா - ஜனவரியில் 20 நாட்கள் சென்னையில் திரு. வே. வேங்கடராஜுலு ரெட்டியார் இல்லத்தில் தங்கி அவரிடம் சிவஞான முனிவரின் தொல் காப்பிய முதல் சூத்திர விருத்திக்குப் பாடம் கேட்டுத் தெளிவு பெற்றேன். ஹாமில்ட்டன் வாராவதியிலிருந்து திருவல்லிக்கேணி காவல் நிலையம் வந்து சேர்வதற்குச் சுமார் அரைமணி நேரம் ஆகும். இந்த நேரத்தில் கதை சொல்லுவதுபோல் சொல்விக்கொண்டே வருவார். பல்கலைக் கழகம் வந்ததும் பக்கங்களைச் சுட்டி உரைத்து "நான்கு பக்கங்கள் படியுங்கள்’’ என்று கூறுவார். படித்தால்