பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பட்டம் பெறுவதில் மேற்கொண்ட முயற்சிகள் 65

கண்ணாடியில் தம் முகம் தெரிவதுபோல் அந்த நான்கு பக்கங்களில் கூறப்பெற்றுள்ள பொருள் தெளிவாகும். இப்படிப் பத்துப் பன்னிரண்டு நாட்களில் சூத்திரவிருத்தி தெளிவாயிற்று,

திரு முத்து. சு. மாணிக்கவாசக முதலியார் சீறாப் புராணம் பதிப்பித்தவில் டாக்டர் முகம்மது உசேன் நயினா ருக்குத் (அரபுமொழிப் பேராசிரியர்) துணையாகப் பணி புரிந்து கொண்டிருந்தார். அவரும் திரு ரெட்டியார் குடி யிருந்த தெருவுக்கு அடுத்த நாட்டு சுப்பராய முதலித் தெரு வில் குடியிருந்தார். அடிக்கடி திரு. ரெட்டியார் இல்லத்திற்கு வந்து போவார். திரு. முதலியார் சங்க இலக்கியங்களிலும் சைவ சமய இலக்கியங்களிலும் நல்ல பயிற்சியுடையவராத லால் அவரை நோக்கி, "" நம் சுப்பு ரெட்டியாருக்கு அகநானூறு களிற்றியானைநிரையிலுள்ள முதல் ஐம்பது பாடல்களைக் கற்பியும்" என்றார். அவரும் புலவர் பெரு மான் பணியைச் சிரமேற்கொண்டு காலையிலும் மாலை யிலுமாகப் பத்து நாட்களில் ஐம்பது பாடல்களையும் அற்புத மாகக் கற்பித்துவிட்டார்.

திரு. முதலியார் கடின சொற்களின் பொருளை விளக்கிக் கொண்டே பாடல்களை இசையுடன் பாடுவார். பாடலின் இறுதியடியைப் பிடித்துக்கொண்டு கீழிருந்து மேலே போவார். சரியாக முடிச்சினை அவிழ்த்துவிட்டுச் சிவகாசி வெடிச்சரங்களை ஆட்டும்போது வெடிகள் தனித்தனியாகக் கழன்று ஓடுவதுபோல், இவர் பாடலைக் கீழிருந்து மேலே பாடிக்கொண்டு போகும்போது, சொற்களின் பொருளும் பாடலின் முழுப்பொருளும் பாட்டிலிருந்து கட்டவிழ்த்துக் கொண்டு என் மனத்தில் பாய்ந்துவிடும்.

நான் துறையூசில பணியாற்றிய பொழுது அடிக்கடிச் சொற்பொழிவுகளுக்காக வந்து போகின் தவர் திரு வீ. உலக

தி-5