பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66. நினைவுக் குமிழிகள்-2

ஊழியனார். அப்போது அவர் சேலம் கல்லூரியில் தமிழ் விரிவுரையாளராகப் பணியாற்றிக் கொண்டிருந்தார். இவரிடம் பொருநராற்றுப்படை', புறநானூற்றில் 1.50 பாடல்கள் பாடங் கேட்டேன். இவருக்குப் பத்துப்பாட்டு, சிலப்பதிகாரம் முழுதும் உரையுடன் மனப்பாடம். பொரு நராற்றுப் படையில் பல அடிகளை இசையுடன் பலமுறை படித்து, நிறுத்தவேண்டிய இடங்களில் நிறுத்தும்போது துணிக்கடையில் நல்ல விற்பனையாளர் பல்வேறு வண்ணத் துணிகளை வேகமாக விரித்துக்காட்டும்போது அவை நம் கண்ணைக் கவர்வது போல், ஊழியனாரின் பாட்டிசை என் கருத்தைக் கவர்ந்தது. சொற்பொருள்களை ஏற்ற இடங் களில் கூறிக்கொண்டே பொருநராற்றுப் படையை அற்புத மாகக் கற்பித்துவிட்டார். உலக ஊழியரிடம் பாடம் கேட்டது பெறற்கரிய பெரும் பேறாகக் கருதுகின்றேன். இந்த ஆண்டில் வார விடுமுறை நாட்களில் திருவையாறு சென்று தொல்காப்பியம்-சேனாவரையத்தில் தோன்றும் ஐயங்களையெல்லாம் திரு பு. ரா. புருடோத்தம நாயுடு அவர்களிடம் போக்கிக்கொண்டேன். இப்பொழுதுதான் திரு. சி. இலக்குவனாரின் தொடர்பும் அவர் துறையூருக்கு வந்து பேசும் வாய்ப்பும் ஏற்பட்டன. ... •

அக்காலத்தில் திருச்சி மாவட்டத்தில் தமிழ் படித்தவித்துவான் பட்டம் பெற்ற-தலைமையாசிரியன் நான் ஒருவனே என்ற தனிப்பெரும் புகழையும் பெற்றேன். மாவட்டத்திலுள்ள உயர்நிலைப்பள்ளிகளில் பணியாற்றிய தமிழாசிரியர்கள் யாவரும் என்னைப் போற்றினர்; பாராட்டி னர். தமிழாசிரியர்களிடையே தனி மதிப்புப் பெற்ற தலைமையாசிரியன் நான் ஒருவனே என்பதைப் பெருமிதத் துடன் நினைத்துப் பார்க்கின்றேன். அவர்களிடையே நான் மதிப்பு பெற்றதற்கு நான் படித்த தமிழே காரணம் என்ப தனையும் நினைந்து போற்றுகின்றேன். திரு. ப. அரங்க