பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பட்டம் பெறுவதில் மேற்கொண்ட முயற்சிகள் 67

சாமி (இலால்குடி கழக உயர்நிலைப் பள்ளித் தமிழாசிரியர்) யும், திரு. வி. ஆ. பரிமேலழகன் (திருச்சி புனித சூசையப்பர் உயர்நிலைய் பள்ளித் தமிழாசிரியர்), திரு பட்டுசாமி ஒதுவார் (திருச்சி பொன்னையா உயர்நிலைப் பள்ளித் தமிழாசிரியர்) போன்றவர்கள் என் நெருங்கிய நண் களானார்கள்,

X Х X

நான் தமிழ் எம்.ஏ. தேர்வு எழுதுவதற்கு மேற்கொண்ட முயற்சி 1946 இல் ஓரளவு வழியமைத்துத் தந்தது. தவத் திரு ஜெரோம் டி செளலாவின் விடாமுயற்சியால் பல்கலைக் கழகம் ஆசிரியர்கள் தேர்வு எழுத வகைசெய்யும் விதியைச் சற்று மாற்றியமைத்தது. B.A படித்தவர் B.O.L க்கும், B.C) 1 படித்தவர்கள் B A. க்கும், B.Sc. படித்தவர்கள் B. A க்கும்........ . இப்படி ஒரு பட்டம் பெற்றவர்கள் இன்னொரு பட்டமும் பெறலாம் என்று விதியில் மாற்றம் செய்தது. இச்சலுகையைப் பயன்படுத்திக் கொண்டு 1947ல் B.A யில் பகுதி 1: ஆங்கிலம், பகுதி 2 : தமிழ் பாடங் களில் தேர்வுகள் எழுதி வெற்றி பெற்றேன். தமிழில் பல்கலைக் கழகத்தில் முதல் வகுப்பில், முதல் நிலைபெற்றுத் தேறினேன். B.Sc.யில் படித்த அறிவியலைக் கொண்டு எனக்கு B.A. பட்டமு வழங்கியது பல்கலைக்கழகம், B.A. பட்டம் பெற்றவர்கள் M.A. பட்டத் தேர்வு எழுத வேண்டு மானால் B.A. பட்டம் பெற்ற பிறகு இரண்டு ஆண்டுகள் இடைவெளி வேண்டும் என்ற விதி எனக்குத் தடையாக அமைந்து நான் இரண்டு ஆண்டுகள் காத்திருக்க நேரிட்டது; 1949-இல் தான் எழுத முடியும் என்ற நிலை தோன்றியது. சில அசெளகர்யங்களால் 1949லும் 1950லும் இத்தேர்வு எழுத முடியவில்லை. பருவத்தால் அன்றிப் பழா’ என்ற முதுமொழிக்கிணங்க இந்த இரண்டாண்டுகளிலும் தேர்வு எழுத வாய்ப்பில்லாது போயிற்று. 1950-இல் நான் காரைக்குடி அழகப்பர் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில்