பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நான்காம் படிவம் தொடங்க முயற்சி 69

என் மூளை செயற்படத் தொடங்கியது. நடுநிலைப் பள்ளி தொடங்குவதற்குக் கல்வித் துறையினர் போட்ட நிபந்தனைகள், அவை எந்த அளவு நிறைவேற்றப் பட்டுள்ளன? என்பவற்றை முன்வைத்துக் கொண்டு திரு. கணபதி அய்யர் சொன்ன யோசனைகளையும் நினைவில் கொண்டு அழகான முறையில் விண்ணப்பம் தயாரித்துக் கொண்டேன். ஒரு நாள் விடுமுறையன்று தயாரித்த விண்ண பத்தை எடுத்துக் கொண்டு முசிறி கழக உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் திருவேங்கடம் பிள்ளையவர்களிடம் காட்டி அவருடைய யோசனைகளையும் சேர்க்கலாம் என்று கருதி முசிறி சென்றேன். நான் தயாரித்த விண்ணப்பத்தைக் கண்டு அவரே வியந்து போனார்; பாராட்டினார். 'இவ்வளவு சிறிய வயதில் குறைந்த அநுபவத்தைக் சுொண்டு இவ்வளவு அற்புதமாகத் தயாரித்து விட்டீர்களே!’ என்று புகழ்ந்தார். 'எல்லாம் தங்கள் மூலம் பெற்ற அகத் தெழுச்சியே (inspiration) காரணம்' என்று அடக்கமாகப் பேசினேன். இந்த அடக்கமே உங்களை முன்னேற்றப் பாதையில் கொண்டு செலுத்தும்' என்று வாழ்த்தினார்; 'அடக்கம் அமரருள் உய்க்கும்' (குறள்-121) என்று வள்ளுவப் பெருந்தகையும் கூறியுள்ளாரல்லவா? என்றேன். "இலக்கியச்சுடர் ஒளிர்கின்றதே! நீங்கள் வருங்காலத்தில் சிறந்த புலவராகத் திகழ்வீர்கள்!' என்று மீண்டும் வாழ்த் தினார். திருவேங்கடம் பிள்ளை எல்லா வகையிலும் பேராற்றல் வாய்ந்தவர்; அடக்கமே உருவானவர் என்று ஈண்டுக் கூறுதல் மிகவும் பொருத்தமுடையது.

சிற்றுண்டி, காஃபி வழங்கி உபசரித்தார். அதன் பின்னர் நான் தயாரித்துக் கொண்டு சென்றிருந்த விண்ணப் பத்தின் கரட்டு வரைவை (Rough draft) நகாஸ் வேலை செய்தார். இங்கொன்றும் அங்கொன்றுமாகச் சொற்களை யும் நுழைத்து விண்ணப்பத்திற்கு மெருகேற்றினார்: இலக்கிய