பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நான்காம் படிவம் தொடங்க முயற்சி 7 |

இல்லத்தில் இறங்கினோம். இருவருமே விசுவகர்மா குலத் தைச் சேர்ந்தவர்கள். இரண்டு நாட்கள் தலைமையாசிரியர் இல்லத்திலேயே தங்கியிருந்தேன். சென்ற மறுநாளே சி. வி. சுப்பிரமணியத்தைப் (மண்டல ஆய்வாளரின் அலுவலக மேலாளர்) பார்த்தோம்;என்னை அவருக்கு அறிமுகம்செய்தும் வைத்தார் திரு பத்தர். நான் வந்த காரியத்தையும் அவருக்கு எடுத்து விளக்கினார். நான் விடைபெற்று வெளி யில் வரும்போது மறுநாள் வந்து தன்னைக் காணுமாறு பணித்தார் சுப்பிரமணியம். பத்தரும் சுப்பிரமணியமும் ஒரு பத்து மணித்துளிகள் தனியாகப் பேசிக் கொண்டிருந் தனர். பின் இருவருமாக வீடு திரும்பினோம்.

மறுநாள் சுப்பிரமணியத்தைச் சந்திக்கும்போது ஓர் உறையில் ரூ. 25). போட்டு வழங்குமாறு பணித்தார் திரு. பத்தர். அவ்வாறே செய்தேன். இந்த அலுவலகத்தி லிருந்து விண்ணப்பம் சென்ற பிறகே ஊர் திரும்புவதாகச் சொன்னேன். அவர் பத்து நாட்களாகும் என்றார்; நானும் பத்து நாட்கள் காத்திருந்தேன். பத்தர் திருச்சி திரும்பி" பிறகு நான் ஓர் விடுதிக்கு மாற்றிக் கொண்டேன். துரை என்னிடம் தந்த ரூ. 601-இல் இதுவரை 35/- செலவாகி விட்டது. ரூ 1-00க்கு தினசரி வாடகையில் ஒரு சிறு விடுதி யில் தங்கினேன். அறையில் இருப்புக் கொள்ளவில்லை. மண்டல ஆய்வாளர் கூனூரில் முகாம் செய்துள்ளார் எனக் கேள்வியுற்று ஒருநாள் மாலை 3 மணிக்குக் கூனூர் புறப் பட்டேன். அந்த நாள் பேருந்து அமைப்பில் வண்டியோட்டி அருகில் இருவர் உட்காருவதற்கு இடவசதியிருந்தது. நான் போகும்போது பேருந்து நிரம்பிவிட்டது. இடம் இருக்குமா? என்று நடத்துநரைக் கேட்க 'முன் சீட்டில் அமருங்கள்: மற்றோர் இடம் கோவை மாவட்டக் கல்வி அதிகாரிக்கு ஒதுக்கப் பெற்றுள்ளது' என்றார். அவர் சொன்னபடியே அமர்ந்தேன்; ஒருசில மணித் துளிகளில் அதிகாரியும் வந்து அமர்ந்து விட்டார்.