பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நான்காம் படிவம் தொடங்க முயற்சி 73

திரு. பிள்ளையவர்கள் தாம் சொன்னபடியே, இரவு எட்டு மணிக்கு திரு. முதலியாருடன் நேர்காணலுக்கு ஏற்பாடு செய்தார். முதலியாருக்கு வணக்கம் செலுத்தி நான் வந்த காரியத்தை எடுத்திரைத்தேன். இந்த ஆண்டு நான்காம் படிவம் திறப்பதற்கு ஏற்பாடு செய்யும்படியும் தொடர்ந்து பள்ளி உயர்நிலைப்பள்ளியாக வளர்வதற்கு ஆசி கூறும்படியும் வேண்டினேன்.

வி. ஆர். ஆர். ; நீங்கள் ஏன் அங்குபோய் மாட்டிக் கொண்டீர்கள்? உயர்நின்லத் தொடக்கப் பள்ளியே நடத்தத் தெரியாதவர்கள். கஞ்சப் பிரபுக்கள். ஆசிரியர்கட்குப் பத்தும், பன்னிரண்டுமாக ஊதியம் தருகின்றனர். நாங்கள் தரும் மானியத்தைத் தந்து விடுகின்றார்களா? அதிலும் (உள் கணக்கில்) ஏதாவது பிடித்தமா? தெரியவில்லை.

நான் : நானே பணியைக் கோரித் தலைமையாசிரியர் பதவியை ஏற்றேன். நன்கு படித்து முதல் வகுப்பில் தேர்ச்சி (அறிவியல்-வேதியியல்) பெற்றிருக்கின்றேன். துறை யூருக்கு அருகிலுள்ள சிற்றுார் என் சொந்த ஊர். திருமண மும் ஆகிவிட்டது. போர்த் துறையைத் தவிர, வேலை வாய்ப்பு எங்கும் இல்லை. ஊதியம் குறைவாக இருந் தாலும், நிலவருவாயைக் கொண்டு காலம் தள்ளுவேன். காலத்தை வீணடிக்காமல் மேலும் படித்துத் தகுதியாக்கிக் கொண்டு சில ஆண்டுகளில் கல்லூரியில் பணிஏற்க முயல் வேன். என் ஊழ் எம்.ஏ., அல்லது எம்.எஸ்.சி. பட்டம் பெற முடியாது செய்து விட்டது. - -

வி. ஆர். ஆர் : உற்சாகமுள்ள இளைஞராகக் காணப் படுகின்றீர்கள். உங்கள் எதிர்காலம் சிறக்க வாழ்த்து கின்றேன். நான்காம் படிவம் தொடங்கப் பரிந்துரை செய்தால் உங்கட்காகத்தான் செய்ய வேண்டும். உங்கள்