பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'78 நினைவுக் குமிழிகள்-3 திடங்கொண்ட ராம பாணம் செருக்களத்து உற்ற போது கடன்கொண்டார் நெஞ்சம் போலும் கலங்கினான் இலங்கை வேந்தன் என்பது பாடல், இதைப் பலரும் கேட்டிருத்தல் கூடும். வாழ்க்கையின் பொருட்டும் செய்யும் சிறு தொழில் பொருட்டும் பல இடங்களில் கடன் பெற்று அந்தப் பளு தாங்க முடியாமல் ஏற்பட்ட பெரு வருத்தத்தை எண்ணித் துன்பப்படுபவர்கட்கு இந்தப் பாடலின் இறுதி அடி குளிர்பானம் பருகுவது போன்ற உணர்ச்சி ஏற்பட்டு மகிழ்ச்சி தந்திருத்தல் கூடும். பெரும்பாலும் கம்பர் பாடல்களும், கதையின் கட்டங்களும் தொடங்கும்போது எளிதாகத் தொடங்கப் பெற்று இறுதியில் உணர்ச்சி பொங்கச் சென்று முடியும். போகப் போக உணர்ச்சியின் வேகம் கங்குகரையின்றிக் கடந்து போகும்; பாடல்களும் அப்படியேதான் செல்லும். அவற்றின் கடைசி அடி கள்’ என்று வேகத்தைப் பற்றி நின்று உட்பொருளைத் திரட்டி எடுத்துக் காட்டும். இந்த அழகை நினைத்துக் கொண்டு இறுதி அடியை முதலில் தயார் செய்து வைத்து மேலே பொருத்தமான எதுகைகளுடன் மூன்று வரிகளை ஒட்ட வைத்து இமிடேஷன்” பாடல்களைத் தயாரிக்கப் பலர் மேற்கொண்ட முயற்சியே நூற்றுக்கணக்கான பாடல்கள் தோன்றுவதற்குக் காரணமாக அமைந்தது. இவை நூலி லும் ஒண்டவந்த பிடாரிகள் போல் இடம் பெற்றுள்ளன. சில சமயம் இவை ஊர்ப்பிடாரிகளை வெளியேற்றவும் காரணமாக அமைந்து விடுகின்றன. தமிழ் நூல்களில் மற்றவர்களால் பாடப் பெற்று செருகப் பெற்ற பாடல்கள் ஏராளம். சிந்தாமணி தொடக் கத்தில் 2500/- பாடல்களால் முடிந்தன. கந்தியார் பல பாடல்களைப் பாடி இடை இடையே சேர்த்ததால் நூலில் 4000 பாடல்கள் வரை பெருகிவிட்டது. அசல் பாடல்