பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 நினைவுக் குமிழிகள்-3 (2) எல்லாருக்கும் தெரிந்த கதையைக் கம்பர் கையாண்டார். இக்கதையை வால்மீகி ஒரு விதத்தில் நடத்தினார். வேறு பலரும் வேறு விதமாக நடத்தினர். இந்தக் கதைகளைக் கேட்டு வந்தவர்கள் கம்ப ராமாயணத்தைப் படிக்க நேர்ந்தது. கம்பர் தம்முடைய பாத்திரங்களுக்கும் இலட்சியங்களுக்கும் தக்கவாறாக ஆங்காங்குக் கதையையும் கதையின் போக்கையும் மாற்றி புள்ளார். அப்படி மாற்றியதன் காரணமாகவே பாத்திரங்களுக்குத் தனித்தனியான தெளிவு ஏற்படு: கின்றன. இதையெல்லாம் தெரிந்து கொள்ளாத ஒருவர் தம்முடைய கோனலான குறுகிய அளவுகோலைக் கொண்டு வந்து கம்பர் போட்ட பாதையில் வைத்தார். பொருந்தவில்லை. அப்படியே கட்டத்தை மாற்றி எதுகை மோனைகளோடு செய்யுட்களாகக் கொட்டி நிரப்பி விட்டார். எ.டு. மிதிலைக் காட்சிப் படலம். இராமன், இலக்குவன், விசுவாமித்திரர் மூவரும் சனகனது அரண் மனைக்கு வருகின்றனர். இவர்களைச் சதானந்த முனிவர் வரவேற்கின்றார். இராமனைப் பற்றி விசுவாமித்திரர் புகழ்ந்து பேசிவிடுகின்றார். அப்பாவி சதானந்தர் தம் பேச்சிற்குப் பொருள் அகப்படாமல் திண்டாடுகின்றார். இராமனைப் பார்த்தே விசுவாமித்திரரைப் பற்றி (இத்தனை நாளும் இராமனுடன் இருந்த விசுவமா மித்திரரைப் பற்றி!) ஒரு புராணமே பாடித் தீர்க்கின்றார். மிதிலைக்காட்சி 91 முதல் 137 செய்யுள் வரையுள்ள (வை. மு. கோ. பதிப்பின்படி) புராணந்தான் அது. சொல்லுகின்றார் டி. கே. சி: 'இந்த அருமையான கைங் கரியத்தைச் செய்தவர், கம்பருடைய உண்மையான பாட்டுகள் அடங்கிய எத்தனை ஒலைகள்ைக் கிழித்து எறிந்தாரோ சொல்ல முடியாது. நமக்கு வருத்த மெல்லாம், இப்படித் தொலைந்து போன ஒலையைப் பற்றித்தான். போலிக் கவிகளையோ கண்டிப் பார்த்து மட்டம் என்று தள்ளி விடலாமே!” என்று.