பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செருகு கவிகள் 3誇 (3) கம்பரது காவியத்தை ஆயிரம் ஆண்டுகட்கு முன்னர் ஒலைச் சுவடிகளில் எழுதி வைத்தார்கள். சுவடி களை வைத்த இடம் மண்தளம், மண்சுவர். கூரைமேடு இவற்றாலாகிய சாமானியக் கட்டடங்கள்தாம். மழைக் காலத்தில் மேலேயிருந்து ஒழுகும்; கீழேயிருந்து ஈரமும் கறையானும் ஏறும். இது காரணமாக எத்தனையோ ஏடுகள் கெட்டுப் போயிருக்க வேண்டும். சுவடிக்காகப் பயன்படுத்தப் பெற்ற ஒலைகளில் சில பதனுக்கு வராத குருத்தோலைகளாகவும் முற்றிய ஒலைகளாகவும் இருந்திருக்கக் கூடும். இவை மக்கி உதிர்ந்து போயிருக் கலாம். இத்தகைய ஒலைகளின் காரணமாகவும், கறையான், ஈரம், அந்துப்பூச்சி இவற்றின் காரணமாகவும் எத்தனையோ கவிகளும் படலங்களுமே ஒழிந்து போய் விட்டன. கம்பராமாயணத்தைப் பாடிப் பாடி அதில் ஈடுபட்ட சிலர் தொலைந்து போனவற்றிற்குப் பதிலாக செய்யுட்களை எழுதிச் சேர்த்தார்கள். இப்படிச் சேர்க்கும்போது மனப்பாடமாகி இருந்த சில செய்யுட் களை அங்கொன்றும் இங்கொன்றுமாக அப்படியே: வைத்தும் விட்டுள்ளனர். இப்படியெல்லாம் சேர்ந்த செருகு கவிகளையெல்லாம். இயன்றவரை இனங்கண்டு கம்பராமாயணத்திலிருந்து நீக்குவதற்கு எவ்வளவோ துணிவு வேண்டும். முதன் முதலாக டி.கே.சியிடம் இத் துணிவு பிறந்தது. வட்டத் தொட்டி'யில் ஆய்வு நடந்தது. இந்த ஆய்வு முடிவுதான் டி.கே.சியின் கம்பராமாயணப் பதிப்புகள். இது போன்ற 1. திருநெல்வேலியில் இலக்கிய சங்கம் ஒன்று இருந்தது. அது டி. கே.சியின் வீட்டில்தான் கூடுவது வழக்கம். டி. கே. சியின் வீட்டின் முன்கட்டு ஒர் அகலமான கூடம். அக்கூடத்தின் நடுவில் வானவெளியுள்ள வட்ட வடிவமான ஒரு தொட்டிக் கட்டு ஒன்றும் உண்டு. இதில்தான் ஞாயிறுதோறும் மாலை ஐந்து மணிக்குக் கூடி கம்பராமாயண ஆய்வு நடைபெறும். எல்லோரும் கூடுவது இந்த வட்டத் தொட்டியில்தான். நி-6