பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 - நினைவுக் குமிழிகள்-3 என்பதால் வேகத்தோடு பாய்ந்து உருவுகின்ற அம்பினைப் பிடித்து நிறுத்தி வெளியே வாங்கிவிட்டான் என்பது: தெரிகின்றது. வாசத் தாரவன் மார்பெனும் மலைவழங்கு அருவி ஒசைச் சோரியை நோக்கினன்; உடன்பிறப்பு என்னும் பாசத்தால் பிணிப்(பு) உண்டஅத் தம்பியும் பசுங்கண் நேசத் தாரைகள் சொரிதர நெடுநிலம் சார்ந்தான். -Aു.-69 (வாசம்-வாசனையுடைய தார்- மாலை. வழங்குபெருகிய; சோரி ஒசை-இரத்த வெள்ளமாகிய ஆரவாரம், பாசம்- கயிறு சொரிதர-பெருக). இதில், அம்பைப் பிடுங்கவே அந்தப் புழையின் வழியாகக் குருதி பீறிட்டு வழியத் தொடங்குகின்றது. இந்த நிலையைப் பார்த்த தம்பி சுக்கிரீவன் குருதிப் பாசத்தால் தாழாதவனாகி மயங்கித் தரையில் வீழ்ந்து விடுகின்றான் என்ற செய்தி கூறப் பெறுகின்றது. இதற்குமேல், பறித்த வாளியைப் பரூஉ வலித் தடக்கையால் பற்றி இறுப்பன் என்று கொண்டு எழுந்தனன் மேருவை இறுப்போன் - - முறிப்பன் என்னினும் முறிவது அன் றாம்என மொழியாப் பொறித்த நாமத்தை அறிகுவான் நோக்கினன் புகழோன் -டிெ-70