பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

&6 நினைவுக் குமிழிகள்-3 "நீஇனி அயர்வாய் அல்லை’ என்றுதன் நெஞ்சிற் புல்லி நாயகன் இராமன் செய்த நல்வினைப் பயன்இ(து) என்றான் -டிெ-146) (பன்னி - அடுத்தடுத்துச் சொல்லி, அழுங்கினன். அழுதான்; அயர்வாய்-வருந்து வாய்; புல்லி-அணைத்து). என்று இவ்வாறு வருந்திப் பின் அங்கதனைக் கட்டிப் பிடித்து நெஞ்சோடு தழுவிப் பேசினான் என்று கூறப் பெறுகின்றது. என்றனன் இனைய ஆய உறுதிகள் யாவும் சொல்லித் தன்துணைத் தடக்கை ஆரத் தனயனைத் தழுவிச் சாலக் குன்றினும் உயர்ந்த திண்தோள் குரங்கினத் தரசன் கொற்றப் பொன்திணி வயிரப் பைம்பூண் புரவலன் தன்னை நோக்கி. -டிெ-150 இனைய - இத்தன்மைத்தான; உறுதிகள் - இத மொழிகள் தனயன்-மைந்தன்; ஆர-இறுக: புரவலன்இராமன்1. இப்பாடலிலும் மகனைத் தன்னுடைய இரண்டு கைகளாலும் தழுவிப் பேசினான் என்று தெரிகின்றது. இதற்குப் பின்னர், தன்.அடி தாழ்த லோடும் தாமரைத் தடங் கணானும் பொன்உடை வாளை நீட்டி நீஇது பொறுத்தி’ என்றான்;