பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செருகு கவிகள் - - - 89. விழுந்திழி கண்ணின் நீரும் உவகையும் களிப்பும் வீங்க எழுந்துஎதிர் வந்த வீரன் இணையடி முன்னர் இட்டான்; கொழுந்துஎழும் செக்கர் கற்றை குழங்கொள எயிற்றின் ஈட்டம் அழுந்துற மடித்த பேழ்வாய்த் தலைஅடி இறைஒன் றாக -டிெ 66 இவ்விரு பாடல்களிலும் கூறப்பெறும் செய்தி: இலக்குவனை நோக்கி இராமன் ஆனந்தக் জ: Göör6টগুfিf சொரிகின்றான். இந்த நிலையை யாரால் வருணிக்க முடியும்? இந் நிலையில் இராமன் எழுந்து தம்பியின் எதிரே செல்லுகின்றான். இந்திரசித்தின் தலையை அங்கதனிடமிருந்து வாங்கி அதனை இராமனுக்குப் பாத காணிக்கையாக வைக்கின்றான் இலக்குவன். இனி, இராமன் செயல் எப்படியாகின்றது? இராமனுக்கு வாய் அடைத்துப் போகின்றது. அளவு கடந்த உவகையில் ஏற்படும் மெய்ப்பாடு இங்கே தெளிவு பெற நிகழ்கின்றது. தலையினை நோக்கும்; தம்பி கொற்றவன் தழிஇய பொற்றோள் மலையினை நோக்கும்; நின்ற மாருதி வலியை நோக்கும்; சிலையினை நோக்கும்; தேவர் செய்கையை நோக்கும்; செய்த கொலையினை நோக்கும்; ஒன்றும் உரைத்திலன், களிப்புக் கொண்டான் -டிெ 67 வீர உணர்ச்சியோடு, கோபக் கனலோடு காட்சி யளிக்கும் இந்திரசித்தின் தலையைப் பார்க்கின்றான்; உடனே திரும்பி இந்தத் தலையை வெட்டி வீழ்த்திய தம்பி