பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

항 நினைவுக் குமிழிகள்-3 யின் மலை போன்ற திருத்தோள்களை நோக்குகின்றான்: அருகில் நிமிர்ந்து நிற்கின்ற மாருதியின் வலி எப்படிப் பட்டது என்று கருதுகின்றான். இந்த வில்தானா இவ்வளவு பெரிய வலிய வீரனைச் சாய்த்தது என்று தம்பி கையிலிருக்கின்ற வில்லை நோக்குகின்றான்; களிப்பினால் கூத்தாடும் தேவர்களையும் பார்க்கின்றான்; உலகிலேயே நடவாத இந்தப் பெரிய பேர்வழி செத்தானா என்று நினைக்கின்றான். வாய் அடைத்துப் போகின்றது. களிப்பு மேலும் மேலும் பொங்கி வழிகின்றது. முந்தின களிப்புக்கே இலக்குவனைக் கண்டது முதல் வாய்ப் பேச்சு நின்றுபோய் இருந்தது. இப்போது களிப்பு மேலும் ஏறி வளர்கின்றது. அடுத்து நிகழ்வது என்ன? காளமே கத்தைச் சககா கலந்தென க், கரிய குன்றம் நாள் வெயில் பரந்தது என்ன நம்பிதன் தம்பி மார்பில் தோளின் மேல் உதிரச் செங்கேழ்ச் சுவடுதன் மார்பில் தோன்றத் தாளின்மேல் வணங்கி னானைத் தழுவினன் தனித்தொன்று இல்லான் -டிெ 68 தன் காலில் விழுந்து வணங்கிய இலக்குவனை இராமன் வாரித் தூக்குகின்றான். இலக்குவனுடைய மார்பிலும் தோளிலும் நிறைந்திருந்த குருதியின் சுவடு தன் மார்பிலும் தோன்றும்படித் தழுவுகின்றான்; வாய் பேசவில்லை. துரக்கிய துணி வாங்கித் தோளொடு மார்பைச் சுற்றி வீச்சிய கவச பாசம் ஒழித்து.அது விரைவின் நீக்கித்.